பாலிவுட் நட்சத்திர ஜோடி கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமணம் நாளை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
2014-ம் ஆண்டு வெளியான Fugly என்ற பாலிவுட் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கியாரா அத்வானி.. 2016-ம் ஆண்டு வெளியான தோனியின் பயோபிக் படமான ‘எம்.எஸ். தோனி. அண்டோல்டு ஸ்டோரி’ படத்தில் சாக்ஷியாக நடித்ததன் மூலம் அவர் பிரபலமானார்.. இதை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி படங்களில் முன்னணி நடிகையாக கியாரா அத்வானி வலம் வருகிறார்.. இதனிடையே பிரபல நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் கியாரவும் காதலிப்பதாக தகவல் வெளியான வண்ணம் இருந்தது..

2021-ம் ஆண்டு வெளியான ஷெர்ஷா படத்தில் ஒன்றாக பணியாற்றிய போது இருவரும் காதலிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது.. எனினும் கியாராவும், சித்தார்த்தும் தங்கள் காதலை உறவை பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை.. எனினும் இந்த நட்சத்திர ஜோடி ஒன்றாக அடிக்கடி வெளியே சென்றது அவர்களின் காதலை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது..
இந்த சூழலில் சித்தார்த் மல்ஹோத்ரா – கியாரா அத்வானி இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டது.. அதன்படி இன்று ராஜஸ்தானில் உள்ள ஜெய்சாலிமர் பேலஸ் ஹோட்டலில் இந்த நட்சத்திர ஜோடியின் திருமணம் நடைபெற இருந்தது.. இந்த திருமண விழாவில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், சக நடிகர்கள் என 100 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
இந்நிலையில் கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமணம் தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நட்சத்திர ஜோடியின் திருமணம் இன்று நடைபெற இருந்த நிலையில், தற்போது அது நாளை நாளை (பிப்ரவரி 7) நடைபெறும் என்று கூறப்படுகிறது.. எனினும் திருமணம் தள்ளிப்போனதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை
எனினும் பிப்ரவரி 12 ஆம் தேதி சித்தார்த் – கியாரா ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் நடைபெற உள்ளது.. பாலிவுட் பிரபலங்கள் மட்டுமின்றி ஊடகவியலாளர்களும் அழைக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே கியாரா அத்வானி – சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமணத்தின் ஓடிடி ஒளிபரப்பு உரிமையை அமேசான் பிரைம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது…