fbpx

நடுவானில் சென்றபோது திடீர் புகை!. அவசரமாக தரையிறங்கிய விமானம்!. பணியாளர் ஒருவர் பலி!

Swiss Airlines: சுவிட்சர்லாந்தில் பயணிகள் விமானம் நடுவானில் சென்ற போது திடீரென புகை வெளியேறியதையடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவத்தில் விமான பணியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 23ஆம் திகதி ரொமேனியாவின் Bucharest நகரில் இருந்து, சுவிஸின் சூரிச் நகருக்கு சர்வதேச விமானம் ஒன்று புறப்பட்டது. நடுவானில் விமானம் பறந்தபோது எஞ்சின் கோளாறினால் உள்ளே திடீரென புகை எழுந்ததால், ஆஸ்திரிய விமான நிலையில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர் பயணிகள் மற்றும் பணியாளர்கள் விரைவாக வெளியேற்றப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் விமானத்தில் இருந்த கேபின் குழு உறுப்பினர்களில் இருவரான இளம் வயது நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுவிஸ் சர்வதேச ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “திங்களன்று Grazயில் உள்ள மருத்துவமனையில் எங்கள் இளம் சக ஊழியர் இறந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் நாங்கள் தெரிவிக்கிறோம்” என்றார்.

Readmore: ஹமாஸ் அமைப்பின் தளபதியை கொன்ற இஸ்ரேல்..! பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் தொடரும்!. இஸ்ரேல் வார்னிங்!.

English Summary

A sudden smoke in the middle of the air! Emergency landing flight! An employee died!

Kokila

Next Post

இந்த நாட்களில் கணவன் மனைவி உடல் ரீதியாக ஒன்று சேர கூடாது.. ஆன்மீகம் சொல்வது என்ன..?

Wed Jan 1 , 2025
These days husband and wife should not come together physically.. What does spirituality say..?

You May Like