fbpx

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி வழக்கில் திடீர் திருப்பம்..! சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு..!

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் தொடர்பாக சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோரிய வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த கலவரம், தீவைப்பு சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதில், அப்பாவிகளும் கைது செய்யப்பட்டுள்ளதால், அவர்களை அடையாளம் காணக் கோரியும், அவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரியும், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி வழக்கில் திடீர் திருப்பம்..! சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு..!

அந்த மனுவில், மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியை கிருத்திகாவை அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளி செயலாளர் மிரட்டுவதாகவும், அதனால் அவரை உடனடியாக திருச்சி சிறைக்கு மாற்ற வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்படுவதை தவிர்க்க, கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது, அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் வழங்க அனைத்து மாஜிஸ்திரேட்களுக்கும் அறிவுறுத்தும்படி உயர்நீதிமன்ற நீதித்துறை பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் கோரியுள்ளார்.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி வழக்கில் திடீர் திருப்பம்..! சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு..!

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் ரத்தினம் ஆஜராகி அவசர வழக்காக விசாரிக்கும் கோரிக்கையுடன் வந்தபோது சந்திக்க மறுத்ததால், இந்த வழக்கை இந்த அமர்வில் நடத்த விரும்பவில்லை எனக் கூறி வேறு அமர்விற்கு மாற்றும்படி கோரிக்கை வைத்தார். அதை ஏற்று, வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றும்படி தலைமை நீதிபதிக்கு நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர்.

Chella

Next Post

இன்னும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்... வானிலை மையம் முக்கிய தகவல்..

Mon Aug 22 , 2022
தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக கடலோரப்பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. டெல்டா மாவட்டங்கள்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, விழுப்புரம்‌, கடலூர்‌, புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர்‌, […]

You May Like