fbpx

“2022க்கு குட் பை” கூகுள் டூடுலை கிளிக் செய்தால் காத்திருக்கும் சர்பிரைஸ்…

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி கூகுள் நிறுவனம் புதிய டூடுலை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் மத்தியில் 2022ம் ஆண்டு இன்றுடன் விடைபெறும் நிலையில், புத்தாண்டை வரவேற்கவும், உற்சாகமாக கொண்டாடவும் உலக மக்கள் தயாராகி வருகிறார்கள். புத்தாண்டை வரவேற்க தமிழகம் முழுவதும் சுற்றுலாத் தலங்கள், ஹோட்டல்களில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்களில் கூகுள் நிறுவனம் அவ்வப்போது சிறப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இன்று இரவு 12 மணியுடன் 2022-ம் ஆண்டு நிறைவடைந்து 2023-வது புத்தாண்டு பிறக்க உள்ளது.

இந்த நிலையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளா கூகுளின் டூடுலை கிள்க் செய்தால், அந்த பக்கம் லோட் ஆன பின், புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல வண்ணங்களில் பாப்பிங் போன்று வெடித்து சிதறுகிறது. கணினி அல்லது மொபைல் ஸ்கிரீன்கள் முழுவதும் வெடித்துச்சிதறும். ஒருவேளை அந்த கலர்பேப்பர்கள் உங்களுக்கு போதவில்லை என்றால், கணினியின் தேடுபொறிக்கு இடதுபக்கமும், மொபைல் தேடுபொறிக்கு வலதுபக்கமும் இருக்கும் கோனை அழுத்தினால், உங்களுக்கு போதும் போதும் என்றளவு பல வண்ணங்களில் பாப்பிங் வந்துகொண்டே இருக்கும். நாமும் ட்ரை பண்ணி பார்க்கலாமா…

Kokila

Next Post

இளம் வயதில் நரைமுடியா? கவலைப்படாதீர்… இதோ எளிய வழிமுறை…

Sat Dec 31 , 2022
நமது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் முடி நரைப்பதற்குப் பெரிதும் காரணமாகின்றன. இதைத் தவிர, தூசி, சூரிய ஒளி மற்றும் மாசுபாட்டின் காரணமாக முடி மிகவும் மோசமாக உள்ளது. இதற்கு என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்… நரை முடியை கருமையாக்க பலர் ரசாயணம் சார்ந்த ஹேர் டையை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக, நன்மைக்கு பதிலாக தீங்கு ஏற்படுகிறது, ஏனெனில் இத்தகைய நடவடிக்கைகள் முடியை சேதப்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் […]

You May Like