திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சார்ந்தவர் விஸ்வநாதன். இவர் தன்னுடைய குடும்பத்துடன் சென்னிமலையில் இருக்கின்ற தன்னுடைய உறவினர் வீட்டு திருமண நிகழ்வில் பங்கேற்றுக் கொள்வதற்காக சான்ட்ரோ காரில் பயணம் செய்திருக்கிறார்.
இதற்கு நடுவே சென்னி மலையிலிருந்து காங்கேயம் நோக்கி வருகை தந்து கொண்டிருந்த டேங்கர் லாரி காங்கேயத்தை அடுத்துள்ள சிவியார்பாளையம் அருகே இன்று அதிகாலை வருகை தந்து கொண்டு இருந்த சமயத்தில், எதிர்பாராத விதத்தில் விஸ்வநாதன் ஒட்டி வந்த கார் மீது மோதி விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த விஸ்வநாதன் மற்றும் அவருடைய மாமியார் மணி உள்ளிட்டோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தனர். அவர்களுடன் காரில் பயணம் செய்த ரமணன் மற்றும் உமாபதி உள்ளிட்டோர் பலத்த காயங்களுடன் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ரமணன் பலியானார். மேல் சிகிச்சைக்காக உமாபதி காங்கேயம் அரசு மருத்துவமனையிலிருந்து கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் காங்கேயம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.