fbpx

மாணவர் புத்தகத்தில் சாதி பெயரை எழுதிய ஆசிரியர்.. கொந்தளித்த பெற்றோர்..!! ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்

குனிச்சு மோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் ஒருவரின் புத்தகத்தில் ஆசிரியர் குறிப்பிட்ட சாதி பெயரை எழுதி வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவரது மகன் பெயர் ரித்விக். இவர் குனிச்சுமோட்டூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் விஜயகுமார் மாணவர் ரித்விக்கிற்கு ஆங்கில பாடம் நடத்தினார். அப்போது இசை கருவிகள் குறித்து பாடம் நடத்தி உள்ளார். அப்போது இசை கருவிகளை வாசிப்பவர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் என்றும், தாழ்த்தப்பட்ட ஜாதி, கேவலமான ஜாதி என்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தி உள்ளார்.

அதோடு மாணவனின் புத்தகத்திலும் சாதியின் பெயரை ஆசிரியர் விஜயகுமார் எழுதியுள்ளார். இதுபற்றி அறிந்த மாணவன் ரித்விக்கின் பெற்றோர்கள் கடந்த 19 ம்தேதி பள்ளிக்கு சென்றனர். ரித்விக்கின் புத்தகத்தில் ஜாதி பெயர் எழுதியது, ஜாதியை குறிப்பிட்டு பாடம் நடத்தியது பற்றி கேள்வி எழுப்பினர். ஆனால் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் சரியாக பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து திருப்பத்தூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பள்ளியில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பத்தூர் முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, வட்டாட்சியர் நவநீதம் மற்றும் கந்திலி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மர்றும் விடுதலை சிறுத்தை கட்சியினரிடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது திருப்பத்தூர் முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, வட்டாட்சியர் நவநீதம் ஆகியோர், சம்பந்தபட்ட ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டு வாருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விசிக-வினர் கூறுகையில், “பள்ளி மாணவரின் புத்தகத்தில் சாதி பெயரை குறிபிட்ட ஆசிரியர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய வன்மத்துடன் பேசிய ஆசியரை பணி நீக்கம்செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்தனர்.

Read more ; நெருங்கும் புயல்.. 24 மணி நேரமும் ஆவின் பாலகம் இயங்கும்..! ஆனா ஒரு கண்டிஷன்

English Summary

A teacher’s caste name written in a student’s book has created a stir.

Next Post

மாணவர்கள் செம குஷி..!! புதுச்சேரி, காரைக்காலில் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை..!!

Tue Nov 26 , 2024
A holiday has been declared for government and private schools and colleges in Puducherry and Karaikal tomorrow (November 27) in response to heavy rains.

You May Like