fbpx

நெருங்கும் புயல்.. 24 மணி நேரமும் ஆவின் பாலகம் இயங்கும்.. ஆனா ஒரு கண்டிஷன்!!

தமிழகத்தில் புயல் எச்சரிக்கையை அடுத்து, மக்களுக்கு தடையின்றி பால் கிடைக்க ஆவின் சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்திய பெருங்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், நாளை புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தற்போது நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்ந்து வருகிறது. இதனால், அதை கணிப்பது சிரமமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஃபெங்கால் புயல் சனிக்கிழமை இரவு சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் தெற்கு ஆந்திராவிலும், வட தமிழக கரையோரங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மழை மற்றும் புயல் என்று வந்தாலே முதலில் தட்டுப்பாடு ஏற்படுவது பால் பாக்கெட் தான். இதன் படி ஏராளமாக மக்கள் 5முதல் 10 பால் பாக்கெட்களை ஒரே நேரத்தில் வாங்கி செல்வார்கள். இதனையடுத்து அனைத்து மக்களுக்கும் பால் பாக்கெட் கிடைக்கும் வகையில் முக்கிய அறிவிப்பை ஆவின் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் கன மழையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அனைவருக்கும் தங்குதடையின்றி ஆவின் பால் விநியோகம் நடைபெற மேற்கண்ட அனைத்து பாலகங்களும் 24 மணி நேரமும் இயங்கும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் அனைத்து பொதுமக்களுக்கும் ஆவின் பால் கிடைக்கும் வகையில் ஒருவருக்கு அதிகபட்சம்  4 பால் பாக்கெட் மட்டுமே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆவின் பால் பவுடர் மற்றும் UHT பால் ஆவின் பாலகங்களில் போதுமான அளவு சேமித்து வைக்கப்பட்டுள்ளது. ஆவின் பாலகங்களில் பால் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை மாநகரில் தேவைப்படும் பகுதிகளில் தற்காலிக விற்பனை நிலையம் அமைத்து ஆவின் பால் பவுடர் மற்றும் UHT பால் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களுக்கு எவ்வித தங்கு தடையின்றி பால் விநியோகம் செய்ய ஆவின் நிறுவனம் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்பது தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

24 மணி நேரமும் இயங்கும் ஆவின் பாலகம்

எதிர்வரும் கன மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழ்க்கண்ட ஆவின் நவீன பாலகங்கள் 24 மணி நேரமும் இயங்க ஆவின் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

1. அம்பத்தூர் பால்பண்ணை கேட் பாலகம்

2. அண்ணாநகர் குட்நஸ் டவர் பூங்கா பாலகம்

3. மாதவரம் பால்பண்ணை பாலகம்

4. வண்ணாந்துரை பாலகம் மற்றும் பெசன்ட் நகர் பாலகம்

5. வசந்தம் காலனி பாலகம், அண்ணாநகர் கிழக்கு

6. சோழிங்கநல்லூர் பால்பண்ணை பாலகம்

7. விருகம்பாக்கம் பாலகம் (வளசரவாக்கம் மெகா மார்ட் அருகில்)

8. C.P.இராமசாமி சாலை பாலகம், மயிலாப்பூர்

Read more ; ”தடையில்லா மின்சாரம், முன்கூட்டியே மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்”..!! ஆட்சியர்களுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு..!!

English Summary

In the wake of the cyclone warning in Tamil Nadu, Aavin has taken some important steps to ensure uninterrupted supply of milk to the people.

Next Post

பள்ளி மாணவிகளிடம் அத்துமீறும் ஆசிரியர்கள்..!! இனி நடவடிக்கை வேற மாதிரி இருக்கும்..!! வெளியான பரபரப்பு உத்தரவு..!!

Tue Nov 26 , 2024
A warning has been issued that the educational certificates of teachers who behave in an undisciplined manner towards female students in schools will be revoked.

You May Like