fbpx

ஷாக் வீடியோ.. கடைக்கு சென்ற சிறுமியிடம் சில்மிஷம் செய்த 70 வயது முதியவர்..!! உ.பியில் அதிர்ச்சி

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் 70 வயது கடைக்காரர் ஒருவர் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சம்பவத்தன்று மளிகை பொருட்கள் வாங்குவதற்காக 10 வயது சிறுமி கடைக்கு சென்றுள்ளார். அந்த கடையை 70 வயதுடைய முதியவர் ஒருவர் நடத்தி வருகிறார். கடைக்கு சென்ற சிறுமியிடம் அந்த முதியவர் பாலியல் துஷ்ப்ரயோகம் செய்துள்ளார். இந்த சம்பவத்தை அங்குள்ள நபர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். சிறுமியை அநாகரீகமாக தொடுவதைக் அந்த வீடியோவில் காணலாம். இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் தாயின் புகாரின் பேரில், தாராபத்பூர் காவல் நிலைய கிராமத்தைச் சேர்ந்த முகமது அன்வரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது குறித்து கூடுதல் எஸ்பி சீதாபூர் பிரகாஷ் குமார் கூறுகையில், அன்வார் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்டம், பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Read more ; உங்களுக்கு இந்த பாதிப்பு இருக்கா..? அப்படினா கண்டிப்பா இதை சாப்பிடாதீங்க..!!

English Summary

A video of a 70-year-old shopkeeper sexually abusing a 10-year-old girl in Sitapur district of Uttar Pradesh is going viral on social media.

Next Post

என்னங்க சொல்றீங்க.. ஹாரன் அடித்தால் சிவப்பு சிக்னல் மாறாதா..!! வாகன ஓட்டிகளுக்கு செக் வைத்த சென்னை போலீஸ்

Fri Sep 6 , 2024
In Chennai signals, if the horn is too loud, the red signal will not change. A green signal will fall only if there is silence. Let's take a closer look at this new practice.
இனி அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பொருத்தினால் வழக்குப்பதிவு..! சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை..!

You May Like