ஆந்திராவில் கட்டிப்பிடித்துக்கொண்டே பைக் ஓட்டிச் சென்ற காதல் ஜோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெட்ரோல் டேங்கின் மீது அந்த பெண் அமர்ந்து பைக் ஓட்டும் நபரை கட்டிப்பிடித்தபடி செல்வது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவை அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்த காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், பெயர் அஜய்குமார் மற்றும் ஷைலஜா என்பது தெரியவந்தது. இரண்டு பேர் மீதும் அலட்சியமாக வாகனம் ஓட்டுதல், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர். இருவரது பெற்றோரும் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு, காதல் ஜோடியையும் எச்சரித்து அனுப்பினர்.