சுவர்களில் சிறுநீர் கழிப்பவர்கள் மீது திருப்பி சிறுநீரை அடிக்கும் சுவர் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
லண்டனில் சுவர்களில் சிறுநீர் கழித்தால், கழிப்பவர் மீதே சிறுநீர் திருப்பி அடிக்கும் வகையிலான நவீன பெயிண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் அளித்த புகாரின் பேரில் இந்தப் பெயிண்ட், முக்கியமான 10 இடங்களில் உள்ள சுவர்களில் அடிக்கப்பட்டுள்ளது. கவுன்சில் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த பெயிண்ட் முற்றிலும் ஒட்டவிடாமல் பல அடுக்குகளாகப் பூசப்படுகிறது. இதனால் சுவரில் படும் சிறுநீர் மற்றும் பிற திரவங்கள் மீண்டும் தெறித்து, அங்கு சிறுநீர் கழிப்போர் சற்றும் எதிர்பார்க்காத மிகவும் மோசமான ஆச்சரியத்தை அளிக்கிறது. இந்த புதிய முயற்சி நல்ல பயனளிப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக இரவு நேரங்களில் கூட்டமாக உள்ள இடங்கள் மற்றும் அதிக அளவில் பொது சிறுநீர் கழிக்கும் பகுதிகள் இந்த ஆன்டி-பீ பெயிண்ட் பூசுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆன்டி-பீ பெயிண்ட் குரித்த தகவல் வெளியாகிய நாள் முதலே இணையத்தில் இது குறித்த பல்வேறு வீடியோக்களும், மீம்ஸ்களும் பரவி வருகிறது.