இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். அதில், நாள்தோறும் பல்வேறு விதமான செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. அந்த செய்திகள் வியப்பை தருபவையாகவும், சில சமயங்களில் சோகத்தை தருபவையாகவும், சில நேரத்தில் கோபத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். அதன் பிறகு பல செய்திகள் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் கூட இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு பத்திரிக்கை இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது திருமணங்களின் போது சில சமயங்களில் மதுவால் பல பிரச்சனைகள் ஏற்படும். இதுபோன்று தன் மகளின் திருமணத்திலும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் உள்ள ஹடாலா கிராமத்தைச் சேர்ந்த ஒரு தந்தை, தனது மகளின் திருமணத்தில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக ஒரு புது விதமான ஐடியாவை யோசித்துள்ளார். அதாவது மது குடித்திருப்பவர்கள் திருமணத்திற்கு வர வேண்டாம் என பத்திரிக்கையில் தெளிவாக அச்சிட்டுள்ளார். இந்த அழைப்பிதழ், தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.