fbpx

கோபத்தின் உச்சத்திற்கு சென்ற மனைவி….! கணவனின் நாக்குத்துண்டான பரிதாபம்…!

காதல் என்றாலும் சரி, திருமண வாழ்க்கை என்றாலும் சரி இரண்டுமே வெவ்வேறு இனிமையான அனுபவங்களை கொடுக்கும் ஒரு உறவாகத்தான் இருக்கும்.காதல் என்பது ஒரு அழகான உணர்வு அந்த உணர்வு வாழ்வின் இறுதி வரையில் கணவன், மனைவிக்கிடையே இணைந்திருந்தால் நிச்சயமாக அவர்களுக்குள் பிரிவோ சண்டையோ வராது.

ஆனால் காதலிக்கும் போது ஒரு சில ஜோடி சண்டையிட்டு பிரிந்து சென்று விட்டு, அதன் பிறகு எப்படியோ திருமணம் செய்து கொண்டு திருமணத்திற்கு பின்பான வாழ்க்கையில் ஒருவரை, ஒருவர் புரிந்து கொண்டு ஒற்றுமையாக இருப்பார்கள்.இன்னும் சிலர் காதலிக்கும் போது ஒற்றுமையாக இருந்துவிட்டு திருமணத்திற்கு பின்பான வாழ்க்கையில் சதா சர்வ காலமும் சண்டையிலேயே ஓடிக் கொண்டிருக்கும்.

ஆனால் காதலும் சரி, திருமணமும் சரி ஒரு வித்தியாசமான பிரபு காதல் என்பது வித்தியாசமான உணர்வை கொடுக்கும் ஒரு உறவு முறை என்றால், திருமணம் என்பது அனைத்தையும் உணர்ந்து நின்று நிதானமாக, பொறுமையாக செயல்பட வைக்கும் ஒரு உறவு முறை.

காதல் என்றாலும் சரி, திருமணம் என்றாலும் சரி இரண்டுமே ஆண், பெண் இருவரும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆனால் சிலர் காதலிக்கும் போது எந்த வித பொறுப்பும் இல்லாமல் இருந்து விடுவார்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு அவர்கள் திருமணத்திற்கு முன்பாக பொறுப்பற்ற நிலையில் இருந்தது அதே பிரச்சனை அடிக்கடி ஆரம்பமாகும்.

ஆனால் திருமணம் என்பது இன்பமும், துன்பமும், ஏற்றமும் இறக்கமும் அனைத்தும் கலந்த ஒரு உறவு தான். ஆனால் இவை அனைத்தையும் தாண்டி கணவன், மனைவிக்குள் ஊடலும், ஒற்றுமையும் இருப்பது அவசியம்.காதல் என்ற அளவிற்கு புனிதமானதாக இருக்கிறதோ அதே அளவிற்கு இந்த கணவன் ,மனைவி உறவும் புனிதமான உறவாகும்.

ஆனால் திருமணத்திற்கு பின்பான வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் எப்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக தெரிந்து கொள்ளாத இளம் தலைமுறைகளால் கணவன், மனைவி என்ற உறவுக்கு அர்த்தமில்லாமல் போய்விடுகிறது.

ஆனாலும் இளம் தலைமுறை என்று எடுத்துக் கொண்டால் 80களில் இருந்த கணவன் மனைவிக்கும் தற்போதுள்ள கணவன், மனைவிக்கும் இடையே மிகப் பெரிய மாற்றம் காணப்படுகிறது.முன்பெல்லாம் கணவனுக்கு எப்போதும் பெண் அடங்கி தான் அடக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

ஆனால் தற்போதைய இளம் தலைமுறையினர் அவர்களுக்கு இருக்கும் ஆற்றலால் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு நடந்து கொள்கிறார்கள். அதனால் யார் மீதும் யாரும் அதிகாரம் செலுத்துவதும் இல்லை யார் மீதும், யாரும் அடக்கு முறையை பயன்படுத்துவதும் இல்லை.ஆனால் உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது.

லக்னோவில் இருக்கின்ற தாகுர் கஞ்ச் பகுதியில் வசித்து வரும் சல்மா கடந்த வெள்ளிக்கிழமை தன்னுடைய கணவர் முன்னாவுடன் நடைபெற்ற தகராறு காரணமாக ஒரு வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.அதாவது முன்னாவுக்கும் சல்மாவுக்கும் இடையே வெகுகாலமாக தகராறு இருந்ததாக சொல்லப்படுகிறது இதனை தொடர்ந்து சல்மா தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

ஆனாலும் முன்னாள் தன்னுடைய மனைவியை தன்னுடன் வருமாறு கட்டாயப்படுத்தி இருக்கிறார் இதன் காரணமாக, நேற்று முன்தினம் மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு சென்ற முன்னாள் தன்னுடைய வீட்டிற்கு தன்னுடன் வருமாறு சல்மாவுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அது தகராறாக மாறியது.இவர்களுக்கும் ஏற்பட்ட சண்டை அதிகரித்ததால் மனைவி கணவனின் நாக்கை கடித்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

சல்மா தன்னுடைய கணவரின் நாக்கை கொடூரமாக பற்களால் கடித்ததில் நாக்கு துண்டாக தரையில் விழுந்தது இதனால் பலத்த காயம் அடைந்த முண்ணாவும் மயங்கி விழுந்தார். அவரை காவல்துறையினர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்சமயம் சல்மா காவல் நிலையத்தில் இருக்கிறார் ஆனால் சல்மா எதற்காக இப்படி செய்தார் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக ஏ டி சி பி சிரஞ்சீவிநாத் சிங்க தெரிவித்ததாவது இந்த தம்பதிக்கிடையே பல வருடங்களாக சண்டை நடைபெற்று வருகிறது.மனைவி கணவனை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று கணவன் தன்னுடைய குழந்தைகளை சந்திப்பதற்காக அங்கு வந்தபோது இந்த அசம்பாவிதம் நடந்திருக்கிறது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்த வழக்கின் பின்னணியில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Next Post

Wow..! 250 இடங்களில் 1500 இ-ஸ்கூட்டர்... டெல்லி அரசின் புதிய திட்டம் விரைவில் அறிமுகம்.. முழு விவரம்...

Sun Jan 29 , 2023
டெல்லியில் 250 இடங்களில் விரைவில் இ-ஸ்கூட்டர் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் போக்குவரத்து சீர்திருத்தங்கள் குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முன்னோடித் திட்டம் துவாரகாவில் தொடங்கப்பட உள்ளது. அடுத்த ஓராண்டில், டெல்லி அரசு 250 இடங்களில் 1,500 இ-ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் “ அரசு பெரிய […]

You May Like