ஹரியானா மாநிலத்தில் சூட்கேஸில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதியில் அதிர்ச்சியும் பயமும் ஏற்பட்டது. ஹரியானா மாநிலத்தின் பானிபட் ரயில்வே மேம்பாலம் அருகே சந்தேகத்திற்கிடமான சூட்கேஸ் ஒன்று இருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் அந்த சூட்கேஸை பரிசோதித்து பார்த்தனர். அப்போது அந்த சூட்கேஷிற்குள் ஒரு பெண் சடலம் இருப்பது தெரியவந்தது.
மேலும் இந்த சம்பவம் பற்றி கூறும் காவல்துறையினர் அந்தப் பெண்ணின் சடலமானது ரோக் டக் ஜெய்பூர் தேசியச் சாலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். சில தினங்களுக்கு முன்பாக கையும் கால்களும் பச்சை கயிறால் கட்டப்பட்ட ஒரு பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவிற்கும் இன்று சடலமாக மீட்கப்பட்ட பெண்ணும் ஒன்றா? என்பது போன்ற ஏராளமான விடை தெரியாத கேள்விகள் இருக்கின்றன. தடயவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை எல்லாவிதமான ஆதாரங்களையும் சேகரித்து அந்தப் பெண்ணின் உடலை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றது. இந்த வழக்கு தொடர்பாக தீவிரமாக விசாரிக்கப்பட்டு விரைவிலேயே குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை அறிவித்துள்ளது.