தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மாரியம்மாள் என்ற பெண் உயிரிழந்த செய்தியை கேட்டு வேதம் அடைந்தேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டதோடு, அவரது குடும்பத்திற்கு 3️ லட்சம் ரூபாயும், காயமடைந்த கனக ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கு 50,000 ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.