fbpx

யோகா மாஸ்டருடன் கள்ளக்காதல்… நண்பர்களுடன் சேர்ந்து ஸ்கெட்ச்… நெஞ்சை பதற வைக்கும் கொலை சம்பவம்.!

விருதுநகர் மாவட்டத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மனைவி கள்ளக்காதலன் மற்றும் நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பழைய பேருந்து நிலையம் எதிரே ஸ்வீட் கடை நடத்தி வந்தவர் சிவக்குமார். 43 வயதான இவர் முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தனது கடையில் வேலை செய்த காளீஸ்வரி23) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் இருக்கிறது.

கடையில் போதிய வருமானம் இல்லாததால் சென்னை சென்று சிவகுமார் பணியாற்றி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தீபாவளி கொண்டாடுவதற்காக ராஜபாளையம் திரும்பிய அவர் தந்தையின் சமாதிக்குச் சென்று வழிபட சென்று இருக்கிறார். அப்போது அவரது தந்தையின் சமாதி அருகில் மது அருந்திக் கொண்டிருந்த மூன்று பேருடன் சிவகுமாருக்கு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்த மூன்று பேரும் சிவகுமாரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமான விசாரணையில் இறங்கினார்.

காவல்துறையின் விசாரணையை தொடர்ந்து பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது. சிவகுமாருக்கு சொந்தமான வீடு ஒன்றில் ஐயப்பன்(27) என்ற யோகா மாஸ்டர் வாடகைக்கு இருந்திருக்கிறார். சிவக்குமார் சென்னையில் வேலைக்காக சென்ற போது காளீஸ்வரிக்கும் ஐயப்பனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை சிவக்குமார் கண்டித்ததால் தங்கள் காதலுக்கு இடையூறாக இருந்த சிவகுமாரை கொலை செய்ய கள்ளக்காதல் ஜோடி தனது நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டியது. இதனைத் தொடர்ந்து தீபாவளிக்கு ஊருக்கு வந்த சிவகுமாரை காளீஸ்வரி மற்றும் அவரது கள்ளக்காதலன் ஐயப்பன் அவரது நண்பர்கள் விக்னேஷ் மற்றும் மருதுபாண்டி ஆகியோரின் துணையுடன் படுகொலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நான்கு பேரையும் கைது செய்த காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Kathir

Next Post

திருச்சி டோல்கேட் அருகே திருநங்கை கொடூர கொலை! சிக்கிய முக்கிய தடயம்.!

Thu Nov 16 , 2023
திருச்சியில் நம்பர் 1 டோல்கேட் அருகே திருநங்கை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பி ஓடிய கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மண்ணச்சநல்லூர் மேல காவக்கார தெருவை சேர்ந்தவர் திருநங்கை மணிகண்டன் என்ற மணிமேகலை(28). கரூர் மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த இவர் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு திருச்சி வந்துள்ளார். இந்நிலையில் திருச்சி நம்பர் […]

You May Like