அவுரங்காபாத்தில் பாலியல் தொல்லை தர முயன்றதால் இளம்பெண் ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுரங்காபாத்தில் பெண் ஒருவர் ஓடும் ஆட்டோவில் இருந்து எகிறி குதித்தார். இதையடுத்து பலத்த காயம் அடைந்து சாலையில் விழுந்த அவரை அங்கிருந்த சிலர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இது பற்றி அவரிடம் விசாரித்தபோது ஆட்டோவில் சென்றபோது ஓட்டுனர் பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் அதிவேகத்தில் ஆட்டோ ஓட்டினார். அவரிடம் இருந்து தப்பிக்க நினைத்து சாலையில் குதித்துவிட்டேன். என்றார். இதையடுத்து அவுரங்காபாத் கிராந்தி நவுக் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆட்டோ ஓட்டுனர் சையத் அக்பர் ஹமீத் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டது. இந்த காட்சிகள் டுவிட்டரில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலத்த காயம் அடைந்த பெண் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இது தொடர்பாக போலீசார் கூறுகையில் .’’மைனர் மாணவி ஆட்டோவில் உஸ்மான்புரா பகுதியில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவரிடம் ஓட்டுனர் ஆபாசமாக பேசியுள்ளார் பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். இதனால் ஏதோ தவறாக உணர்ந்துள்ளார். அவுரங்காபாத் சிலிகானா காம்ப்லெக்ஸ் அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்தபோதே அவர் தப்பிக்க நினைத்து குதித்தார். இதனால் படுகாயம் அடைந்துள்ளார். என தெரிவித்தார்.