fbpx

ஆண் பாலியல் தொழிலாளியிடம் உல்லாசம் அனுபவிக்க சென்ற இளம்பெண்..!! 4 பவுன் செயினை பறிகொடுத்த சம்பவம்..!!

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பல துறைகளில் வளர்ந்துள்ள நிலையில், டேட்டிங் செயலிகளின் செயல்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பாலியல் தொழிலுக்கும் இந்த இணையதள செயலியை பலர் பயன்படுத்தி வருகின்றனர். சமீப ஆண்டுகளாக ஆண்களும் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். இதை கால் பாய் என்று குறிப்பிடுகின்றனர்.

அப்படித்தான், சென்னையைச் சேர்ந்த பெண் பொறியாளர் ஒருவர் இதுபோன்ற கால் பாய் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்துள்ளார். அந்த செயலியை பயன்படுத்தும்போது அதில் இளைஞர் ஒருவரின் புகைப்படம் வந்துள்ளது. அதைப்பார்த்த அந்த பெண்ணுக்கு அந்த இளைஞர் மீது விருப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, செயலியில் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொண்டனர்.

பின்னர், இருவரும் சந்தித்து உல்லாசமாக இருக்க முடிவு செய்தனர். அந்த இளைஞர் திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து அந்த இளம்பெண்ணை அழைத்துள்ளார். இதையடுத்து, இருவரும் அறையில் உல்லாசமாக இருந்த நிலையில், வீட்டிற்கு இளம்பெண் செல்ல முயற்சித்தார். அப்போதுதான் அந்த பெண்ணின் தங்க நகை மாயமாகியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நகையை கால் பாயாக வந்த இளைஞர்தான் எடுத்துச் சென்றிருப்பார் என்று அறிந்த அந்த இளம்பெண் அந்த இளைஞருக்கு போன் செய்துள்ளார்.

ஆனால், அந்த இளைஞரை தொடர்பு கொள்ள முயன்றபோது அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போதுதான் அந்த இளைஞர் தன்னுடைய 4 சவரன் தங்க நகையை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. தங்கம் விலை உச்சத்திற்கு கொண்டு சென்று வரும் சூழலில், சுமார் 2.5 லட்சம் மதிப்பிலான நகையை கால் பாயிடம் பறிகொடுத்ததால் அந்த பெண் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

பின்னர், திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்குச் சென்று நடந்த விவரங்களை முழுமையாக கூறி அந்த இளைஞர் மீது புகார் அளித்துள்ளார். அந்த இளைஞரின் தொலைபேசி எண், புகைப்படத்தை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கால்பாயிடம் உல்லாசம் அனுபவிக்கச் சென்ற பெண் நகையை பறிகொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ”பொண்டாட்டியே போய்ட்டா”..!! ”இனி இது எதுக்கு”..? மனைவியை பிரிந்த விரக்தியில் ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட கணவன்..!!

English Summary

While the two were frolicking in the living room, the young lady tried to go home.

Chella

Next Post

இந்த 3 மாவட்டங்களுக்கும் இன்று மிக கனமழை எச்சரிக்கை..!! மற்ற மாவட்டங்களிலும் வெளுத்து வாங்கப் போகுது..!!

Fri Nov 8 , 2024
A warning has been given that heavy to very heavy rain will fall in all the 3 districts of Kanyakumari, Nellai and Thoothukudi today.

You May Like