fbpx

அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதி..? அவரே சொன்ன பதிலை பாருங்க..!!

அண்ணாமலை மத்திய அமைச்சராகப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அவர் பாஜக மாநில தலைவராகவே தொடர்வார் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நரேந்திர மோடி 3-வது முறையாக நாட்டின் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இன்று மாலை 7.15 மணிக்கு டெல்லியில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி உடன் கேபினட் அமைச்சர்களும் பதவியேற்க இருக்கின்றனர்.

இதற்கிடையே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தீவிரமாக பேசப்பட்டு வந்தது. மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்பட்டால், மாநில தலைவர் பதவியில் இருந்து அவர் மாற்றப்படுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், அண்ணாமலை பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்ற முதல் தமிழகத்தில் செல்வாக்கு சற்று வளர்ந்து வருவதாகவும், 2026 சட்டசபை தேர்தல் வரை அவர் தொடர வேண்டும் என்று இங்கிருந்து ரிப்போர்ட் தலைமைக்குச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான், தமிழ்நாட்டில் அரசியல் பணிகளை தொடர உள்ளதாக அண்ணாமலையே தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் இடம்பெறுவோருக்கான தேநீர் விருந்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லையா..? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு அவர் பதிலளித்தார். இதன் மூலம், அவருக்கு மத்திய அமைச்சர் பதவியை பாஜக மேலிடம் அளிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More : வீட்டில் இருந்து கொண்டே மாதம் ரூ.20,500 சம்பாதிக்கலாம்..!! எப்படி தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!!

English Summary

While there were reports that Annamalai will become the Union Minister, new information has come out that he will continue as the BJP state president.

Chella

Next Post

ஒருவாரத்திற்கு இந்த உணவு முறைகளை மட்டும் ஃபாலோ பண்ணுங்க..!! உடல் எடை டக்குன்னு குறையும்..!!

Sun Jun 9 , 2024
Follow the 7-day diet plan given below to melt body fat and see a positive change in weight loss.

You May Like