fbpx

நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் ஓட்டலில் ரூம் போட்ட இளைஞர்..!! பதறியடித்து ஓடிவந்த பெற்றோர்..!! நடந்தது என்ன..?

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் சன்வர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் கபில் சாகு (23). இவருக்கும் நிஷா என்பவருக்கும் திருமணம் செய்வது என நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில், கபில் தனது பெற்றோரிடம் விஜய் நகர் பகுதிக்கு செல்கிறேன் எனக்கூறிவிட்டு காலை நேரத்தில் சென்று உள்ளார். ஆனால், மதியம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால், கபிலின் தந்தை அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, கபில் விஷம் குடித்த தகவலை, அவருடன் இருந்த நிஷா தெரிவித்துள்ளார். அவரும் விஷம் குடித்திருக்கிறார். தங்களை காப்பாற்றும்படியும் அவர் கோரியுள்ளார். அவர்கள் இருவரும் ஓட்டலில் தங்கி இருந்துள்ளனர். ஆனால், எந்த ஓட்டல் என தெரியாமல் கபிலின் உறவினர்கள் பல இடங்களில் தேடி கடைசியில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

ஓட்டல் பணியாளர்கள் உதவியுடன் மாற்று சாவி அறையை உடைத்து உள்ளே சென்ற போது, கபில், நிஷா இருவரும் சுயநினைவற்று கிடந்தனர். அவர்களை உடனே மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். பொதுவாக, திருமணம் செய்வதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கும் போது இது போன்ற தற்கொலை முடிவை காதல் ஜோடிகள் எடுப்பது வழக்கம். ஆனால், திருமண நிச்சயம் செய்த ஜோடி ஓட்டலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

குழந்தை இல்லாததால் கோபம்…..! மருமகளை விஷம் வைத்து கொலை செய்து கொடூர மாமியார்….!

Tue May 9 , 2023
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சாலி பேகம் என்ற பெண்ணின் மாமியார் குழந்தை இல்லாததை காரணமாக காட்டி கண்டித்ததாக சொல்லப்படுகிறது.அதன் பிறகு மாமியாருக்கும் மருமகளுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலி பேகம் தன்னுடைய மாமியார் தனக்கு விஷம் கொடுத்து விட்டதாக தன்னுடைய சகோதரனை கைபேசியில் அழைத்து கூறியுள்ளார். குழந்தை பிறக்காததற்காக அந்தப் பெண்ணிடம் அவருடைய கணவர் அவ்வப்போது தகராறு செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சகோதரியின் […]
கள்ளக்காதலுக்கு இடையூறு..!! கணவர் கொலை..!! உடலை புதைத்த இடத்தில் செப்டிக் டேங்க்..!! பகீர் சம்பவம்..!!

You May Like