சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும் குத்தாட்டம் போட்ட சுனிதா வில்லியம்ஸ்!! வைரலாகும் வீடியோ!

சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்ததும், மகிழ்ச்சியில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததை உற்சாகத்துடன் அவர் கொண்டாடினார். துள்ளல் நடனத்துடன் அவர் உள்ளே நுழைய சக விண்வெளி வீரர்கள் அவரை ஆரத்தழுவி வரவேற்றனர். இதனை போயிங் ஸ்பேஸ் நிறுவனம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அவருடன் பேரி வில்மோரும் சென்றுள்ளார்.

இந்திய நேரப்படி நேற்று முன்தினம் (புதன்கிழமை) இரவு 8.22 மணி அளவில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு வெற்றிகரமாக புறப்பட்டுச் சென்றார்.  புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து  ‘அட்லஸ் 5’  ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில்,  சுனிதா வில்லியம் மற்றும் மற்றொரு நாசா வீரர் பேரி வில்மோரும் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டனர்.  சுனிதா வில்லியம்ஸ் ஸ்டார்லைனர் விண்கலத்தை இயக்கினார்.  தொடர்ந்து சுமார் 27 மணி நேரம் பயணித்து,  இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணியளவில் அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக அடைந்தனர்.

அங்கு சுமார் 8 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். ஸ்டார்லைனரின் இந்த வெற்றிப் பயணம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு கடுமையான போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டார்லைனர் விண்கலனை நாசாவுக்காக போயிங் நிறுவனம் வடிவமைத்தது. இதன் பின்னணியில் சுமார் பத்து ஆண்டு கால உழைப்பு உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த விண்கலனில் விண்வெளி வீரர்களை அனுப்புவது என நாசா திட்டமிட்டது. இருந்தும் பல்வேறு முறை அந்த திட்டம் கைவிடப்பட்டது. இதன் ஒப்பந்த மதிப்பு சுமார் 4.2 பில்லியன் டாலர்கள். இந்த சூழலில் தற்போது அதன் முதல் பயணம் சக்சஸ் ஆகியுள்ளது.

சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்ததுமே மிகுந்த மகிழ்ச்சியடைந்த சுனிதா வில்லியம்ஸ்,  அங்கு நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி,  சர்வதேச விண்வெளி நிலையத்தின் பாரம்பரிய முறைப்படி மணி அடித்து, சுனிதா வில்லியம்ஸ் வரவேற்கப்பட்டுள்ளார்.  பயணம் வெற்றியடைந்ததை குறிப்பிட்டு கூக்குரலிட்டவாறு உள்ளே வந்த அவர்,  நடனமாடியபடியே அங்கிருந்த சக ஆராய்சியாளர்களை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.  தொடர்ந்து காற்றில் மிதந்தபடியே மீண்டும் நடனமாடி உற்சாகமடைந்தார்.

அதனைத்தொடர்ந்து நாசாவின் கூற்றுப்படி, போயிங் 2019 நவம்பரில் பேட் அபார்ட் ஆர்ப்பாட்டத்தையும் நிறைவு செய்தது. க்ரூ டிராகன் மற்றும் ஸ்டார்லைனர் விண்கலங்கள் ஒவ்வொன்றும் மற்றொன்றுக்கு காப்புப் பிரதியாக செயல்படும், தொழில்நுட்ப சிக்கல்கள் அல்லது பிற பின்னடைவுகள் ஒரு விண்கலத்தை தரையிறக்கினாலும், விண்வெளி வீரர்களுக்கு தொடர்ந்து பறக்கும் விருப்பத்தை வழங்கும்.

வில்லியம்ஸ் மே 1987 இல் யுனைடெட் ஸ்டேட்ஸ் நேவல் அகாடமியில் இருந்து யுனைடெட் ஸ்டேட்ஸ் நேவி அகாடமியில் ஒரு என்சைனாக தனது கமிஷனைப் பெற்றார். வில்லியம்ஸ் 1998 இல் நாசாவால் விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் எக்ஸ்பெடிஷன்ஸ் 14/15 மற்றும் 32/33 ஆகிய இரண்டு விண்வெளிப் பயணங்களில் ஒரு அனுபவமிக்கவர். அவர் எக்ஸ்பெடிஷன் 32 இல் விமானப் பொறியாளராகவும் பின்னர் எக்ஸ்பெடிஷன் 33 இன் தளபதியாகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more ; சூப்பர் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் சௌரப் நெட்ரவால்கர்..!! பாகிஸ்தானை பந்தாடிய இந்தியர்..!! யார் இவர்..?

English Summary

SpaceX and Boeing developed their respective vehicles under NASA’s Commercial Crew Programme, a partnership with private industry contractors. From the outset, the space agency aimed to have both companies operating at once.

Next Post

காலையிலேயே குடித்துவிட்டு காதல் மனைவியை உல்லாசத்திற்கு அழைத்த கணவன்..!! கடைசியில் நேர்ந்த சோகம்..!!

Fri Jun 7 , 2024
Villupuram has been shocked by the incident where the husband beat up the newlywed who refused to have sex.

You May Like