fbpx

பெண் போலீஸ் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்… மடக்கி பிடித்து கும்மாங்குத்து குத்திய அதிரடி சம்பவம்..!

சென்னை, அயனாவரம் வசந்தா கார்டன் பகுதியில் குடியிருக்கும் இளம் பெண் (23). இவர் காவல்துறையில் காவலராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை தனது வீட்டில் இருக்கும் பாத்ரூமில் குளித்துள்ளார்.

அப்போது பாத்ரூமின் பக்கவாட்டு ஜன்னல் வழியாக ஒருவர் எட்டிப் பார்ப்பது அவருக்கு தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், உடனடியாக ஆடைகளை உடுத்திக் கொண்டு வெளியே வந்து பார்த்தபோது, குளியலறையை எட்டிப் பார்த்தது பக்கத்து வீட்டில் இருக்கும் வேன் ஓட்டுநர் வசந்த் (26) என்று தெரிந்தது.

இதனைத் தொடர்ந்து அவரை மடக்கி பிடித்த அந்த பெண், அவரது கையில் இருந்த செல்ஃபோனை வாங்கி சோதனையிட்டதில், தான் குளிப்பதை செல்ஃபோனில் வீடியோ எடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து செல்போனை பறிமுதல் செய்த பெண் காவலர், அவரை அயனாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். வசந்தை கைது செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

ஓசூரில் பிட்காயின் மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்திற்கு சீல் …..

Sun Sep 18 , 2022
ஒசூரில் செயல்பட்டு வரும் ஏகே ஸ்டாக் நிறுவனத்தில் பிட்காயின் மோசடி நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து அந்நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஒசூரின் பிரதான பகுதியில் ஏ.கே.ஸ்டாக் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. அருண்குமார் என்பவர் இந்நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இதில் பிட்காயினில் முதலீடு செய்வதால் விரைவில் பணம் இரட்டிப்பாக்கிக் கொடுக்கப்படும் எனக்கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளனர். இது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன. போச்சம்பள்ளியைச் சேர்ந்த சுதாகர் மற்றும் லட்சக்கணக்கில் […]

You May Like