திருமணத்திற்கு ஆசையாக மேக்கப் போட்டு வந்த பெண்மணி, மேக்அப்புடன் ஆவி பிடித்ததால் அவருக்கு ஒவ்வாமையாகி முகம் கருமையாகவும் கண்கள், கண்ணம் ஆகியவை வீங்கி விகாரமாகி இருக்கின்றன. இதன் காரணமாக அவரது திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தின் அரிசிகெரெ பகுதியை சார்ந்த இளம் பெண் ஒருவருக்கும் அப்பகுதியைச் சார்ந்த இளைஞருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு மார்ச் இரண்டாம் தேதி இவர்களது திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் மணப்பெண் தனது திருமணத்திற்காக அப்பகுதியில் உள்ள கங்கா பியூட்டி சலூன் என்னும் அழகு சாதன நிலையத்திற்கு சென்று மேக்கப் போட்டுள்ளார்.
பின்னர் தனது வீடு திரும்பிய அந்தப் பெண்மணி வீட்டிற்கு வந்து வெந்நீரில் ஆவி பிடித்திருக்கிறார். ஆவி பிடித்த சிறிது நேரத்திலேயே அவரது முகம் கருமை நிறமாக மாறி கண்கள் கண்ணம் மூக்கு ஆகியவை வீங்கி விகாரமாகி இருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்வதறியாது தவித்துள்ளனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மணமகன் திருமணத்தை உடனடியாக நிறுத்தியிருக்கிறார். இந்த சம்பவம் தற்போது காவல் நிலையம் வரை சென்று இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அழகு கலை நிபுணர்களின் கருத்துப்படி அழகு சாதன பொருட்களில் கெமிக்கல்கள் அதிகமாக இருக்கும். சில நேரங்களில் அந்தப் பொருட்கள் காலாவதியாகி இருந்தாலும் இது போன்ற விளைவுகளை ஏற்படுத்தும் . மேலும் அழகு சாதன பொருட்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினாலும் அதன் விளைவுகள் இவ்வாறு இருக்கும் என தெரிவித்தனர். இது தொடர்பாக அந்த பெண்ணை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தினால் உண்மையான காரணம் தெரியவரும் எனவும் தெரிவித்தனர்.