fbpx

Aadhaar | ’ஆதாரை கையில் வைத்துக்கொண்டே இதை செய்யாமல் இருக்கீங்களா’..? உடனே வேலையை முடிங்க..!!

ஆதார் கார்டு என்பது இந்தியர்கள் அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணம் ஆகும். அனைத்து வேலைகளுக்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆதார் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்நிலையில், ஆதார் கார்டுகளை வழங்கும் அரசு நிறுவனமான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது, ஆதாரில் உள்ள தனிநபர் விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். அதில், ஏதேனும் திருத்தம் இருந்தாலும் அதை உடனடியாக செய்துவிட வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். சிம் கார்டு வாங்குவது, வங்கிக் கணக்கைத் திறப்பது போன்ற பல்வேறு திட்டங்களின் பலன்களைப் பெறுவதில் நீங்கள் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆதார் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 10 ஆண்டுகள் பழையான ஆதார் கார்டை உடனடியாக புதுப்பிக்க வேண்டும்.

அதன்படி, ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் மார்ச் 14ஆம் தேதிக்கு முன் இதைச் செய்யவில்லை என்றால், நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஆதாரை அப்டேட் செய்ய வேண்டும். இதற்கான இலவச அப்டேட் தேதி மார்ச் 14 அன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதைத் தாண்டி அப்டேட் செய்தால் கட்டணம் செலுத்த வேண்டும். இதுபோன்ற சூழலில், உங்கள் ஆதார் கார்டு 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையாக இருந்தால், நீங்கள் அதை புதுப்பிக்க வேண்டும். உங்கள் ஆதார் கார்டை அப்டேட் செய்ய நீங்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை. அதை வீட்டிலேயே அப்டேட் செய்யலாம். ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இந்த வேலையை எளிதாக முடிக்கலாம்.

English Summary : Aadhar Update Last Date

Read More : ICU-வில் சிகிச்சை பெறும் இளம்பெண்..!! மயக்க ஊசி செலுத்தி பலாத்காரம் செய்த ஊழியர்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

Chella

Next Post

President 2024: மார்ச் 5-ம் தேதி முதலாவது குடிநீர் கணக்கெடுப்பு விருதுகள் வழங்கும் குடியரசு தலைவர்..‌!

Wed Feb 28 , 2024
முதலாவது குடிநீர் கணக்கெடுப்பு விருதுகள் மார்ச் 5-ம் தேதி குடியரசுத்தலைவரால் வழங்கப்படும். 2024 மார்ச் 5-ஆம் தேதி விஞ்ஞான் பவனில் முதலாவது குடிநீர் கணக்கெடுப்பு விருதுகளை வழங்கவிருக்கிறது. குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு தலைமை தாங்கும் இந்த நிகழ்ச்சியில் நீர் துறையில் சிறந்து விளங்கும் நகரங்களும், மாநிலங்களும் கௌரவிக்கப்படும். நகரங்கள் மற்றும் மாநிலங்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பிரதிபலிக்கும் வகையில், 130 விருதுகள் வழங்கப்பட உள்ளன. மதிப்புமிக்க குடிநீருக்கான தங்கம், வெள்ளி மற்றும் […]

You May Like