fbpx

ஆதார் கார்டு அப்டேட்!. காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்படுமா?. இன்றுதான் கடைசி தேதி!. மறக்காம பண்ணிடுங்க!

Aadhaar card: இந்தியாவில் பொதுமக்கள் பயன்பாட்டில் பல ஆவணங்கள் உள்ளன. இவைகளில் முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு இந்த அட்டை கட்டாயம் தேவை. வங்கி, சிம் கார்டு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கும் முக்கியமான ஆவணமாக உள்ள ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டியது அவசியம். இந்நிலையில் ஆதாரை இலவசமாக அப்டேட் செய்தற்கான காலக்கெடு விரைவில் முடிவுக்கு வரவுள்ளது.

ஆதார் கார்டு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஒருவர் வாங்கியதில் இருந்து ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் அப்டேட் செய்ய வேண்டும். ஆதார் புதுப்பிப்பு என்பது, அதில் உள்ள அடிப்படை தகவல்களை அப்டேட் செய்வது ஆகும். ஆதார் கார்டில் உள்ள தகவல்கள் சரியானதாகவும், துல்லியமானதவும் இருக்க, அதிலிலுள்ள தகவல்களை புதுப்பிக்க வேண்டியது அவசியம்.

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பித்து கொள்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவுக்கு வர இருக்கிறது. இன்று மாலை வரை எவ்வித கட்டணமுமின்றி ஆதாரில் முகவரி, மொபைல் எண் போன்ற அடிப்படை தகவல்களை அப்டேட் செய்துக் கொள்ளலாம்.அதற்கு பின்பாக ஆதாரை புதுப்பிக்க வேண்டுமென்றால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு முன்பு பலமுறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், கடைசியாக டிசம்பர் 14 ஆம் தேதி வரை கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆதார் கார்டு வாங்கி பத்தாண்டுகள் ஆகிருந்தால், இன்றைக்குள் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம். இந்த காலக்கெடு நீட்டிக்கப்படுவது தொடர்பாக தற்போது வரை எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. பயோமெட்ரிக் தொடர்பான விவரங்களை ஆன்லைனில் இலவசமாக அப்டேட் செய்ய முடியாது. இதற்கு ஆதார் பதிவு மையத்திற்கு சென்று தான் அப்டேட் செய்ய முடியும்.

ஆதாரை இலவசமாக ஆன்லைனில் புதுப்பிக்க மை ஆதார் போர்ட்டல் அல்லது மை ஆதார் என்ற செயலியில் அப்டேட் டாக்குமெண்ட் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். அங்கு தேவையான தகவல்களை அப்டேட் செய்து கொள்ளலாம். ஆதாரை புதுப்பிக்க ரேஷன் கார்டு, இ-ரேஷன் கார்டு மற்றும் பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் தேவை என்பது குறிப்பிட்டத்தக்கது.

Readmore: வந்தாச்சு அறிவிப்பு!. 2025 ஜூன் முதல் ஏடிஎம்மில் பிஎப் பணம் எடுக்கலாம்!. அமலுக்கு வரும் புதிய முறை!

Kokila

Next Post

வாவ்...! சுய உதவிக்குழு உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ரூ.40,000/- வரை மானியம்..! மத்திய அரசு சூப்பர் தகவல்

Sat Dec 14 , 2024
Subsidy of up to Rs. 40,000/- for each member of a self-help group

You May Like