fbpx

Aadhar | ஆதாரை இலவசமாக புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு..!! கடைசி தேதி எப்போது தெரியுமா..? மக்களே உடனே முந்துங்க..!!

ஆதார் கார்டு (Aadhar) என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. இது அடையாளச் சான்றாகவும் முகவரிச் சான்றாகவும் இருக்கிறது. அரசின் நலத்திட்ட உதவிகள், சேவைகள் மற்றும் மானியங்களைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதாரின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய, அவ்வபோது ஆதார் விவரங்களை புதுப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

இதற்கிடையே, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டையை பெற்றவர்கள், அதை புதுப்பிக்கவில்லை என்றால், தற்போது புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பெற, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அடையாளச் சான்று மற்றும் முகவரியைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் விவரங்களையும் புதுப்பிக்க ரூ.50 செலவாகும். மேலும், ஆதார் கார்டை இலவசமாக புதுப்பித்துக்கொள்ளும் காலக்கெடு ஜூன் 14ஆம் தேதி வரை கொடுத்திருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆதார் விவரங்களை எப்படி புதுப்பிப்பது…?

* https://myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்தில், Aadhaar Self-Service portal என்ற பக்கத்தை பார்வையிடவும்.

* பின்னர், ஆதார் எண்ணை பயன்படுத்தி போர்ட்டலில் உள்நுழைய வேண்டும். செயல்முறையை அங்கீகரிக்க பதிவு செய்யப்பட்ட உங்கள் செல்போன் எண்ணுக்கு ஓடிபி வரும்.

* Document Update பகுதிக்குச் சென்று, ஏற்கனவே உள்ள விவரங்களை மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

* அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில் இருந்து பொருத்தமான ஆவண வகையைத் தேர்ந்தெடுத்து அசல் ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

* பின்னர், Submit என்பதை கிளிக் செய்து, விண்ணப்பக் கோரிக்கையின் நிலையைக் கண்காணிக்க சேவை கோரிக்கை எண்ணை (SRN) குறிப்பிட வேண்டும்.

* உங்கள் ஆதார் அட்டையில் உள்ள கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வது விரைவான மற்றும் எளிதான முறையாகும்.

* இது UIDAI-ன் டிஜிட்டல் கையொப்பத்துடன் பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி மற்றும் புகைப்படம் போன்ற உங்களின் ஆதார் விவரங்களைக் காண்பிக்கும்.

QR குறியீடு மூலம் ஆதார் சரிபார்ப்பு :

* கூகுள் பிளே ஸ்டோரில் mAadhaar என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

* பின்னர், செயலியை திறந்து, திரையின் மேல் வலது மூலையில் உள்ள QR குறியீடு ஐகானை கிளிக் செய்து, நீங்கள் சரிபார்க்க விரும்பும் ஆதார் அட்டை, இ-ஆதார் அல்லது ஆதார் பிவிசியில் அச்சிடப்பட்ட QR குறியீட்டின் மீது மொபைல் கேமராவைச் சுட்டிக்காட்டவும்.

* QR குறியீட்டை ஸ்கேன் செய்த பிறகு பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி மற்றும் புகைப்படம் போன்ற விவரங்கள் காண்பிக்கும்.

* இந்த விவரங்கள் UIDAI ஆல் டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்டு, நம்பகத்தன்மையை சரிபார்க்கலாம்.

* ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டுமென்றால், “Update Your Aadhar” என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர், முகவரி மாற்றம் உள்ளிட்ட விவரங்களை அப்டேட் செய்து கொள்ளலாம். தேவையான கட்டணத்தை செலுத்த வேண்டும். பின்னர் Save செய்து பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.

Chella

Next Post

போதையில் அட்டகாசம் செய்த மகனை தட்டி கேட்ட தந்தை….! கடைசியில் மகன் என்ன செய்தார் தெரியுமா….?

Sun Aug 27 , 2023
போதைக்கு அடிமையாகி, அட்டகாசம் செய்த மகனை தட்டிக்கேட்ட தந்தையை, மகன் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில், கொலை செய்த சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சமையல்காரரான தேவராஜ்(63) என்பவரின் மகன் சரத்குமார்(27). இவர் சென்னையில், ஒரு தனியார் ஹோட்டலில் மாஸ்டராக பணி புரிந்து வந்தார். சமீபத்தில் அவருக்கு வேலை பறிபோனதாக தெரிகிறது. வேலை பறிபோனதால், விரக்தியில் இருந்த சரத்குமார், போதை பழக்கத்திற்கு அடிமையானார். நாள்தோறும் குடித்துவிட்டு […]

You May Like