இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மூலமாக வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை பொதுமக்கள் பெற்றிடவும், வங்கி தொடர்பானவைகளை பெற்றிடவும் பயன்படுகிறது. இந்நிலையில் மத்திய மின்னணு தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது. அதன் பேரில் ஆதார் அடையாள அட்டைதாரர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதார் அட்டைகளை புதுப்பிக்க வேண்டும்.
அது சமயம், கடந்த 8 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஆதார் அட்டைதாரர்கள் தங்களது ஆதார் அட்டையில் உள்ள அடையாள சான்று மற்றும் முகவரி சான்று ஆகியவற்றை புதுப்பித்துக்கொள்ள வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள நிரந்தூ ஆதார் சேவை மையத்தினை அணுகலாம். அல்லது மை ஆதார் என்ற இணையதளத்திலும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
மேற்படி ஆதார் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளும் பொருட்டு தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் (எல்காட்) மூலம் கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டமாக ஆதார் சிறப்பு முகாம் பின்வரும் கிராமங்களில் எதிர்வரும் 30.03.2023 வெள்ளி கிழமை அன்று நடைபெற் உள்ளது.
