fbpx

செக்…! ரூ.1000 உதவித்தொகை பெற ஆதார் எண் கட்டாயம்…! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!

தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் பயன் பெற ஆதார் எண் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ் மற்றும் ஆங்கில வழியில் அரசுப் பள்ளிகளிலும், தமிழ் வழியில் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படித்து முடித்து, பட்டம், பட்டயம், மற்றும் ஐடிஐகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இத்திட்டம் முழுமையாக மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படுகிறது. எனவே, இத்திட்டத்துக்கு ஆதார் எண் மிகவும் அவசியமாகிறது. பயனாளிகள் கட்டாயம் ஆதார் எண் வைத்துள்ளவராக இருத்தல் வேண்டும்.

கல்வி நிறுவனங்கள், தகுதியான மாணவர்கள் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த தகவலை அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்தி, அருகிலுள்ள ஆதார் மையங்களுக்கு சென்று ஆதார் பதிவு செய்ய மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அந்தப் பகுதியில் ஆதார் மையம் இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆதார் மையம் அமைத்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Aadhaar number is mandatory to get Rs.1000 scholarship

Vignesh

Next Post

பாரிஸ் ஒலிம்பிக் 2024!. உலகின் நம்பர்.1 டென்னிஸ் நட்சத்திரம் விலகல்!. இப்படியொரு நோயா?

Thu Jul 25 , 2024
Paris Olympics 2024!. The world's No. 1 tennis star quits!. Such a disease?

You May Like