ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் கல்வி உதவித் தொகைக்கான இணையதளம் கடந்த 30.01.2023 அன்று திறக்கப்பட்டு இது வரை சுமார் 3 லட்சம் மாணாக்கர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்ட விதிமுறைகளின்படி, 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல், முதன்முறையாக e-kyc முறையில் ஆதார் எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை கொண்டு அதார்விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, இணையத்தில் பெறப்பட்ட சாதிசான்று,வருமானச்சான்று, ஆதாருடன் இணைக்கப்பட்ட சேமிப்புக் கணக்கு எண் ஆகிய அனைத்து ஆவணங்களையும் இணையவழியில் சரிபார்க்கப்பட்டு,மாணாக்கர்களின் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு கல்வி உதவித் தொகை மாணாக்கர்களுக்கு நேரடியாகசென்றடையும் வகையில் கல்வி உதவித்தொகை இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கல்வி உதவித்தொகை இணையதளத்தில் கல்வி உதவித் தொகை பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள காணொளி வீடியோ பார்த்து உரிய ஆவணங்களுடன் கல்வி உதவித்தொகைக்கு தகுதியுள்ள மாணாக்கர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், கல்வி உதவித்தொகை இணையதளத்தில், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு விவரங்களே எடுத்துக்கொள்ளப்படும் என்பதினால், கல்வி உதவித்தொகை விடுவிப்பதற்கு முன்னர் மாணாக்கர் அனைவரும் தங்கள் வங்கி கணக்கு விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.
