பான் கார்டு ( Pan Card) மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. இந்தியாவில் நிதி சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பான் கார்டு அவசியம் தேவை. பெரிய தொகைகளை அனுப்புவதற்கு பான் கார்டு கட்டாயம் தேவை. பான் கார்டு என்பது 10 இலக்க தனிப்பட்ட எண்களை கொண்ட மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாகும் ஆகும். இந்த கார்டு வருமான வரித்துறை மூலம் வழங்கப்படுகிறது. எனவே இந்த பான் கார்டை ஆதாருடன் இணைப்பது மிக கட்டாயமாக உள்ளது. விரல் ரேகை, கண் விழித்திரை உள்ளிட்ட பதிவுகள் மூலம் ஆதார் எண் வழங்கப்படுகிறது. ஒருவர் ஒரு ஆதார் மட்டுமே பெற முடியும். இதனால் அது தனிமனிதர்களின் ஊறுதியான அடையாளமாக கருதப்படுகிறது.
இந்தநிலையில், மக்களவையில் ஆதார் – பான் இணைப்பு தொடர்பான கேள்விகளுக்கு நிதி துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி எழுத்து மூலம் பதிலளித்துள்ளார். அதில், 2023 ஜூன் 30ம் தேதிக்கு பிறகு ஆதார் – பான் இணைப்பவர்களுக்கு தாமத கட்டணம் ரூ.1000 விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அந்தவகையில் 2023 ஜூலை 1 முதல் 2024 ஜனவரி 31வரை ரூ.601.97 கோடி தாமத கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. 11.48 கோடி பான் கார்டுகள் இன்னும் ஆதாருடன் இணைக்கப்படாமல் உள்ளது என்று தெரிவித்தார்.