மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தேசிய மின்-ஆளுமை பிரிவு ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட UMANG செயலி பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.. அனைத்து இந்திய குடிமக்களுக்கும் மத்திய அரசு முதல் உள்ளாட்சி அமைப்புகள் வரை மற்றும் பிற குடிமக்களை மையப்படுத்திய சேவைகள் வரையிலான இந்திய மின்-அரசு சேவைகளை அணுகுவதற்கான ஒரு தளத்தை வழங்குகிறது.
இந்நிலையில் ஆதார் அட்டை பயனர்களின் வசதிக்காக, UMANG ஆப் ஆனது குடிமக்களை மையமாகக் கொண்ட புதிய சேவைகளைச் சேர்த்துள்ளது. இதுகுறித்து UMANG App India-ன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அந்த பதிவில் “ UMANG செயலியில் ஆதார் அட்டை புதிய சேவைகளை சேர்த்துள்ளது! இப்போது UMANG செயலியைப் பதிவிறக்குவதன் மூலம் கூடுதல் தகவல்களைப் பெறுங்கள்; 97183-97183 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது..
என்னென்ன சேவைகளை UMANG செயலியில் பார்க்கலாம்..?
- மக்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தி ஆதாரின் நிலையைச் சரிபார்க்கலாம்
- பதிவுசெய்தல் அல்லது புதுப்பித்தல் கோரிக்கையின் நிலையைச் சரிபார்க்கலாம்
- ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் மற்றும் மின்னஞ்சலைச் சரிபார்க்கலாம்
- ஆதார் எண் அல்லது பதிவு ஐடியை (EID) கண்டுபிடிக்க இந்தச் சேவையைப் பயன்படுத்தவும்
பல பயனுள்ள நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடிய மிக முக்கியமான ஆவணங்களில் ஆதார் அட்டையும் ஒன்றாகும். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்கிய 12 இலக்க தனித்துவ அடையாள எண், உங்கள் மக்கள்தொகை மற்றும் பயோமெட்ரிக் தரவுகளைக் கொண்டிருப்பதால், குறிப்பிடத்தக்க அடையாள ஆவணங்களில் ஒன்றாக மாறியுள்ளது.