fbpx

ஆதார் – வாக்காளர் அட்டை இணைப்பு..!! கால அவகாசம் நீட்டிப்பு..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

ஆதார் எண் – வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கான கால அவகாசம் அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய தேர்தல் விதிகள் திருத்த சட்டம் 2021ன் படி, ஆதார் எண்ணுடன் வாக்காளர் தகவல்களை இணைக்க அனுமதி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த 2021 ஆகஸ்ட் 1ஆம் தேதி துவங்கி வரும் 2023 ஆண்டு மார்ச் 3ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்களிடம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாக்காளர்கள், தங்களது ஆதார் எண் விபரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க https://WWW.nvsp.in, https://votersportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மூலமாகவும், வோட்டர்ஸ் ஹெல்ப்லைன் மொபைல் ஆப் போன்ற செயலி வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

இதுதவிர, ஆதார் எண் விவரத்தை வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஆகியோரிடம் அளித்து வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 31ஆம் தேதியுடன் கால அவகாசம் முடியவிருந்த நிலையில், மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்து சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Chella

Next Post

என்ன ஆனது விஜய்க்கு….? குடும்பத்தில் வெடித்த பூகம்பம்….!

Wed Mar 22 , 2023
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்துவரும் விஜய் தொடர்பாக சமீப காலமாக பல சர்ச்சைகள் வெளியாகி வருகின்றன. அதில் ஒன்றுதான் விஜய்க்கும், அவருடைய மனைவிக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டுள்ளது என்ற செய்தியாகும். நடிகர் விஜய் மற்றொரு நடிகை உடன் நெருக்கமாக இருக்கிறார் எனவும், இதன் காரணமாக, தன்னுடைய மனைவியை விட்டு அவர் பிரிந்து விட்டார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. ஆனாலும் அது உண்மை இல்லை என்பது அதன் பிறகு தெரியவந்தது. […]

You May Like