நம் நாட்டில் ஆதார் கார்டு என்பது மிகவும் முக்கியமான ஆவணமாக உள்ளது. ஆதார் கார்டு வெறும் அடையாள அட்டையாக மட்டுமின்றி, மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் உதவுகிறது. குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல் இறந்த நபர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வாங்குவது வரை என அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. பெரும்பாலான மக்களிடம் இப்போது பழைய ஆதார் கார்டே இருக்கும்.
அதாவது, 10 ஆண்டுகளுக்கு முன் ஆதார் கார்டு புதிதாக வாங்கியிருப்பார்கள். அப்படி ஆதார் கார்டு வாங்கி 10 ஆண்டுகள் ஆகியிருந்தால் அதை அப்டேட் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆதார் கார்டில் உள்ள தகவல்கள் தற்போதைய தகவல்களாகவும், அப்டேட்டுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரில் உள்ள முகவரி தவறாக இருந்தால், நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இந்நிலையில், ஒரு மொபைல் நம்பரில் எத்தனை ஆதார் கார்டுகளை இணைக்க முடியும் என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. எந்த குடும்ப உறுப்பினரின் ஆதார் கார்டை வேண்டுமானாலும் ஒரே மொபைல் நம்பருடன் இணைக்க முடியும். ஒரே மொபைல் நம்பருடன் பல ஆதாரை இணைக்க முடியும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, குடும்ப உறுப்பினர்கள் தங்கள் ஆதார் இணைப்புக்கு ஒரு முக்கிய உறுப்பினரின் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.
Read More : BEL நிறுவனத்தில் வேலை..!! மாத சம்பளம் ரூ.55,000..!! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது தெரியுமா..?