fbpx

ஆடி அமாவாசை!… 12 நாட்களுக்கு சிறப்பு ரயில்!… தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ஹரித்வார் மற்றும் வாரணாசியில் உள்ள கோவில்களை சுற்றி பார்க்க ஆடி அமாவாசை சிறப்பு யாத்திரை என்ற பெயரில் 12 நாட்கள் பாரத் கௌரவ் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு முக்கிய பண்டிகை நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஹரித்வார் மற்றும் வாரணாசியில் உள்ள கோவில்களை சுற்றி பார்க்க ஆடி அமாவாசை சிறப்பு யாத்திரை என்ற பெயரில் 12 நாட்கள் பாரத் கௌரவ் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொச்சுவேலியில் இருந்து ஆகஸ்ட் 7ஆம் தேதி நல்லிரவு புறப்படும் இந்த ரயில் நெல்லை, மதுரை, திருச்சி மற்றும் சென்னை வழியாக குஜராத் பனாரஸ் வரை இயக்கப்படும். இந்த ரயிலில் சாதாரண பெட்டியில் பயணிப்பதற்கு 22,350 ரூபாயும் , மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் பயணிக்க 40 ஆயிரத்து 350 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு!... 12 நாட்கள் கூடுதல் விடுமுறை!... முழுவிவரம் இதோ!

Thu Jul 6 , 2023
பணியின்போது உறுப்பு தானம் செய்ய விரும்பும் மத்திய அரசு ஊழியர்கள் சிகிச்சையின் போது 42 நாட்கள் சிறப்பு விடுமுறை எடுக்க உரிமை உண்டு என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் நிறுவனங்களில் பணி செய்து கொண்டு உறுப்பு தானம் செய்ய விரும்பும் நபர்களுக்கு சிகிச்சையின் போது 42 நாட்கள் சிறப்பு விடுமுறை எடுக்க உரிமை உண்டு என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது நீங்கள் யாருக்காவது கிட்னி கொடுக்க […]

You May Like