fbpx

நாளை முதல் ஆரோக்யா பால், தயிர் விலை குறைப்பு!!

தமிழ்நாட்டின் முன்னணி தனியார் பால் நிறுவனங்களுள் ஒன்றான ஆரோக்யா நிறுவனம் நாளை முதல் பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், தயிருக்கான விற்பனை விலையை கிலோவுக்கு 4 ரூபாயும் குறைப்பதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, இனி அரை லிட்டர் ஆரோக்கியா பால் பாக்கெட் விலை ரூ.36 க்கும், 1 லிட்டர் பாக்கெட் ரூ.68 க்கும் விற்கப்படும். இந்த விற்பனை விலை குறைப்பு பால் கொள்முதல் விலை குறைப்போடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகும்.

நான்கு வகையான பால் பாக்கெட்டுகள் விற்பனையில் இருக்கும் போது விற்பனை விலை உயர்வு நேரத்தில் நான்கு வகையான பாலுக்கும் விலை உயர்வு செய்துவிட்டு தற்போது பாலுக்கான விலையை மட்டும் குறைப்பது ஏற்புடையதல்ல. இருப்பினும் பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வரும் அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் முன்னோடியாக பால், தயிர் விற்பனை குறைப்பு செய்யும் ஹட்சன் நிறுவனத்தின் செயல்பாடுகளை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் வரவேற்றுள்ளது.

மேலும், ஹட்சன் நிறுவனத்தின் பால் மற்றும் தயிர் விற்பனை விலை குறைப்பை முன்னுதாரணமாக கொண்டு மற்ற தனியார் பால் நிறுவனங்களுக்குள் அந்தந்த நிறுவனத்தில் பால், தயிருக்கான விற்பனை விலையை குறைக்க முன் வர வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Read more ; ’ஒரு கடை கூட கிடையாது’..!! கொள்கையுடன் வாழும் கிராமம்..!! அதுவும் நம்ம தமிழ்நாட்டில்..!!

English Summary

Aarokya has sent a circular to milk dealers to reduce the selling price of milk by Rs 2 per liter and curd by Rs 4 per kg from tomorrow.

Next Post

பான் கார்டுக்கு வந்த சிக்கல்..!! எல்லாமே மாறுது..!! மக்களே புதிய ரூல்ஸை பாருங்க..!!

Tue Jun 18 , 2024
Is pan card also required for depositing money in bank? What are the rules for that? Let's see in this post.

You May Like