fbpx

ஆவின் பால் விலை உயர்வு..!! உண்மை என்ன..? அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்..!!

தமிழ்நாடு அரசின் ஆவின் நிர்வாகம் நாளொன்றுக்கு சுமார் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. ஆவின் பாலகங்களில் இனிப்புகள், பால் பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ஆவின் நெய், வெண்ணெய்க்கு மக்களிடையே வரவேற்பு அதிகம் உண்டு. கடந்த 9 மாதங்களில் ஆவின் நெய், வெண்ணெய் விலை அடுத்தடுத்து உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆவின் பால் விரைவில் உயர்த்தப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ”ஆவின் பால் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதுகுறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுப்போம். சந்தையில் தனியார் நிறுவனங்களின் பால் விலையை ஒப்பிடுகையில், ஆவின் பால் விலை மிகவும் குறைவாக உள்ளது. ஆனால், பாலுக்கான விற்பனை விலையை கூட்டுவோம் என்ற தகவல் வெறும் கட்டுக்கதைதான். பால் விலையை உயர்த்துவதற்கான எந்த முயற்சிகளிலும் அரசு ஈடுபடவில்லை.

தனியார் நிறுவனங்களின் பாலின் விலையை ஏற்றாமல் அதன் அளவை குறைத்து அதே விலையில் விற்பதாக கூறுகின்றனர். இதனை இந்திய உணவு மற்றும் தர ஆணையம் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும். இதுபற்றி தகவல் அனுப்பியுள்ளோம். தனியார் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை வைத்து பால் விற்கின்றனர். ஆகவே, ஆவின் பொருட்களை பொதுமக்கள் கண்டிப்பாக நம்பலாம் என்றும் கூறினார்.

சந்தையில் ஒரு லிட்டர் நெய் விலை ரூ.960 வரை விற்கப்படுகிறது. ஆனால், ஆவினில் விலை ஏற்றிய பிறகும் 700 ரூபாய்க்கே ஒரு லிட்டர் நெய் விற்பனையாகிறது. எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக நெய் விலை உயர்வை கையிலெடுப்பார்கள். பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று லாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ஆவின் எப்போதும் செயல்படாது” என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Chella

Next Post

என்ன.....! ஐஸ்கிரீம் சாப்பிட்டால், கேன்சர் வருமா....?

Wed Sep 27 , 2023
நேற்று பிறந்த குழந்தை முதல், நாளை இறக்கப் போகும் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிரியமான ஒன்றாக இன்றளவும் இருந்து வருகிறது ஐஸ்கிரீம். இப்படி அனைத்து தரப்பு மக்களும் விரும்பி உண்ணும் ஒரு பொருளாக இருக்கும் ஐஸ்கிரீமில் பல்வேறு தீமைகள் நிறைந்துள்ளது. பொதுவாக நாம் ஒரு பழமொழியை சொல்வோம்.அதாவது அளவுக்கு மீறினால், அமிர்தமும் நஞ்சு என்று சொல்வதைப் போல இதிலும் பல்வேறு தீமைகள் ஒளிந்திருக்கிறது. அது பற்றி தற்போது நாம் தெரிந்து […]

You May Like