ஆவின் நிறுவனம் சார்பில் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்; தரமற்ற பால் விற்பனை செய்து யாராவது பாதிக்கப்பட்டால் அரசு தான் பதில் சொல்ல வேண்டும். எனவே அனுமதி இல்லாமல் பால் விற்பதை தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தமிழகம் முழுவதும் ஆவின் தண்ணீர் பாட்டில் விற்பனை திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். ஆவின் பொருட்களின்தரம் குறையாது. அதே நேரத்தில் நிர்வாகத்தை லாபத்தில் மீட்டெடுக்க அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என கூறினார்.