டிஜின் ஜெல் (Digene gel) என்னும் மருந்து வெண்மையாக மாறியதாகவும், கசப்பாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவித்ததை அடுத்து, மருந்து தயாரிப்பு நிறுவனமான அபோட் இந்தியா, கோவாவில் தயாரிக்கப்பட்ட பிரபலமான ஆன்டாக்சிட் சிரப், டிஜின் ஜெல் என்னும் மருந்துகளை அனைத்து கடைகளில் இருந்து திரும்பப் பெற்றுள்ளது. இந்த சிரப் பொதுவாக இளஞ்சிவப்பு நிறத்தில் இனிப்புச் சுவையுடன் இருக்கும்.
மத்திய மருந்துக் கட்டுப்பாட்டாளரான சென்ட்ரல் டிரக்ஸ் ஸ்டாண்டர்ட் கன்ட்ரோல் ஆர்கனைசேஷன், அதன் இணையதளத்தில் வெளியிட்ட பொது அறிவிப்பில், “இம்ப்யூன் செய்யப்பட்ட தயாரிப்பு பாதுகாப்பற்றதாக இருக்கலாம் மற்றும் அதன் பயன்பாடு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.” கோவா ஆலையில் தயாரிக்கப்படும் டிஜீன் ஜெல் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என மக்களை எச்சரித்துள்ளது.
இந்த மருந்தை பயன்படுத்திய மக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று மருத்துவர்கள் கூறினாலும், நீண்ட காலத்திற்கு இந்த மருந்தை உட்கொள்பவர்கள் தங்கள் மருத்துவர்களிடம் பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். இருப்பினும், டிஜெனை மாத்திரை வடிவில் உட்கொள்வது பாதுகாப்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது..