fbpx

நாடு முழுவதும் இருந்து 114 கலசங்களில் கொண்டு வரப்பட்ட புனித நீரால் ராமர் சிலைக்கு அபிஷேகம்..!!

உத்தரப்பிரேதச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்று குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளார்.

இந்நிலையில், நாடு முழுவதும் இருந்து பல்வேறு புனித தலங்களில் இருந்து 114 கலசங்களில் கொண்டு வரப்பட்ட புனித நீரால் ராம் லல்லா சிலை அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் தமிழ்நாடு, புனே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பல்வேறு மலர்களைப் பயன்படுத்தி பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த சடங்கில் கோயில் அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தேசிய தலைவர் டாக்டர் ராம் நரேன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேக விழாவுக்கான சடங்கு ஜனவரி 16ஆம் தேதியன்று சரயு நதியிலிருந்து தொடங்கி இன்று கோயில் திறப்பு விழாவுடன் முடிவடைகிறது. ராம் லல்லாவின் புதிய சிலை, அதன் 5 ஆண்டுகள் பழமையான வடிவத்தில், ஜனவரி 17ஆம் தேதியன்று கோவில் வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

அயோத்தி கோவில்!… புதிய சிலையின் முன் வைக்கப்படும் பழைய ராமர் சிலை!

Mon Jan 22 , 2024
இதுவரை தற்காலிக கோவிலில் வைக்கப்பட்டுள்ள பழைய ராமர் சிலை, இன்று கும்பாபிஷேகம் செய்யப்படும் புதிய சிலையின் முன் வைக்கப்படும் என ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்தின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி தெரிவித்தார். உலகமே எதிர்பார்த்து காத்திருந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. இந்தநிலையில், ராமர் கோவிலின் கருவறையில் கடந்த வாரம் 51 அங்குல ராமர் சிலை வைக்கப்பட்டது. மூன்று ராமர் சிலைகள் […]

You May Like