fbpx

சனாதன ஒழிப்பு..!! உதயநிதி, சேகர்பாபு மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்..!! ஐகோர்ட் நீதிபதி பரபரப்பு கருத்து..!!

சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் சென்னை ஐகோர்ட் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு சனாதன தர்மத்திற்கு எதிராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு மற்றும் எம்பி ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக கோ வாரண்டோ வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், திராவிட கொள்கை எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேர்காட்டை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டு பேசியதன் விளைவாகவே தற்போது திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு வழக்கு தொடரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார். அதிகாரத்தில் உள்ளவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது மக்களுக்குள் சாதி, மதம் மற்றும் கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும். கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதிலாக மது உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிப்பதில் அமைச்சர்கள் கவனம் செலுத்தலாம் என நீதிபதி கூறினார்.

மேலும், எந்த மதத்திற்கு எதிராக பேசுவதற்கும் நீதிமன்றம் அனுமதிக்காது என்று தெரிவித்த நீதிபதி, சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டது காவல்துறை தங்களுடைய கடமையை புறக்கணித்து போன்றது எனவும் 2 அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Chella

Next Post

இன்று 16 மாவட்டங்களில் கனமழை..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

Mon Nov 6 , 2023
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 3 தினங்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்றும், நாளையும் 16 […]

You May Like