fbpx

“இந்தியாவின் பெருமை..” அபுதாபியில் முதல் கோவில்.! பிரம்மாண்ட திறப்பு விழா.! கட்டிடக்கலை மற்றும் சிறப்பம்சங்கள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் கட்டப்பட்ட பிஏபிஎஸ் கோவிலை பிரம்மாண்டமான விழாவில் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கோவிலின் கல்லில் சுத்தியல் மற்றும் உளி கொண்டு “வசுதைவ குடும்பகம்”(உலகம் ஒரு குடும்பம்) என்ற வாசகத்தை தன் கைப்பட செதுக்கினார்.

கோவில் திறப்பு விழாவிற்கு பிறகு குழந்தைகள் மற்றும் கோவிலின் சிற்பக் கலைஞர்களுடன் பிரதமர் மோடி உரையாடி மகிழ்ந்தார். இந்த நிகழ்வின் போது அபுதாபியின் முதல் இந்து கோவிலை பிரம்மாண்டமாக உருவாக்குவதில் பெரும் பங்காற்றிய தன்னார்வலர்கள் மற்றும் முக்கிய பங்களிப்பாளர்களை பிரதமர் மோடி வாழ்த்தினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற உலகளாவிய ஆரத்தி எடுக்கும் நிகழ்வில் பங்கேற்றார். உலகெங்கிலும் இருக்கும் 1200 பிஏபிஎஸ் கோவில்களும் ஒரே நேரத்தில் வரலாற்று சிறப்புமிக்க பூஜைகள் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து சுவாமி நாராயணனின் பாதங்களில் பிரதமர் மோடி மலர் இதழ்களை சமர்ப்பித்தார். இதன் பிறகு பிஏபிஎஸ் தலைவர் மஹந்த் சுவாமி மகராஜ் பிரதமர் மோடிக்கு மலர் மாலை அணிவித்தார். மேலும் இந்த கோவில் திறப்பு விழாவில் இந்திய சினிமா நட்சத்திரங்களான அக்‌ஷய் குமார், திலீப் ஜோஷி, விவேக் ஓபராய் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டனர். கோவில் வளாகத்திற்கு வந்தடைந்த பிரதமரை இந்திய மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

இந்த பிரம்மாண்டமான கோவில் துபாய்-அபுதாபி ஷேக் சயீத் நெடுஞ்சாலையில் அல் ரஹ்பாவிற்கு அருகில் உள்ள அபு முரைக்காவில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் ‘BAPS’ சுவாமிநாராயண் சன்ஸ்தாவால் கட்டப்பட்டுள்ளது. கோவிலில் அமைக்கப்பட்டிருந்த கங்கை மற்றும் யமுனை நதிகளில் திறப்பு விழாவிற்கு முன் பிரதமர் மோடி நீர் வழங்கினார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் கட்டப்பட்டிருக்கும் இந்த கல் கோவில் மிகவும் நுட்பமான கட்டிடக்கலையுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இது வளைகுடா பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய கோவில் ஆகும். மேலும் அபுதாபியில் அமைக்கப்பட்ட முதல் கல் கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது. இது பண்டைய கட்டிடக்கலை முறைகளைப் பயன்படுத்தி அறிவியல் நுட்பங்களுடன் இணைக்கப்பட்டு பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை போன்ற நகர கட்டிடக்கலையில் இந்தக் கோவிலும் கட்டப்பட்டிருக்கிறது. 18 லட்சம் செங்கற்கள் மற்றும் 1.8 லட்சம் கன மீட்டர் மணல் கற்கள் பிரத்தியேகமாக ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்டு இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவில் தொழிலாளர்களின் 7 லட்சம் மணி நேர உழைப்பில் உருவாகி இருக்கிறது. மேலும் ராம் மந்திர் போலவே உலோகங்கள் எதுவும் இல்லாமல் இந்தக் கோவில் முழுவதும் கற்களால் கட்டப்பட்டுள்ளது.

அபுதாபியில் உள்ள முதல் இந்து கோவிலான பிஏபிஎஸ் கலாச்சார மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தின் மைய புள்ளியாக மாறியுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிகிறார்கள். இந்தக் கோவிலின் திறப்பு விழாவை முன்னிட்டு அர்ச்சகர்களின் சடங்குகளுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 108 அடி உயரத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த கோவில் ஆன்மீக அடையாளமாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் கட்டிடக்கலை மற்றும் பொறியியலின் அற்புதமாகவும் விளங்குகிறது. ஒற்றுமையின் சின்னமாக விளங்கும் இந்த கோவிலின் அடிக்கல்லை 2017 ஆம் வருடம் பிரதமர் மோடி நிறுவனர்.

Next Post

ரெடி...! இன்று சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு..!

Thu Feb 15 , 2024
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்க உள்ளது. காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு மதியம் 1.30 மணிக்கு நிறைவடைய உள்ளது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு இன்று முதல் ஏப்ரல் 2-ம் தேதியும், 10 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு இன்று முதல் மார்ச் 13-ம் தேதியும் நிறைவடைய உள்ளது. தேர்வர்கள் அரை மணி நேரத்துக்கு முன்னதாக வரவேண்டும் என்றும், செல்போன் உள்ளிட்ட […]

You May Like