fbpx

வேகமெடுக்கும் கொரோனா..!! முதியவர்கள், கர்ப்பிணி பெண்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நெரிசலான இடங்களை தவிர்க்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் பற்றி பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. லேசான அறிகுறிகள் இருப்பது அறியப்பட்டாலும், உடனடியாக அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்கள் இதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மாநிலத்தில் கொரோனா வைரஸ் லேசான அறிகுறிகளுடன் பரவி வருவதாக தகவல் தெரிவிக்கிறது. முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோயுற்றவர்கள் முடிந்தவரை நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் மோசமடைந்தால் (அ) ஆக்ஸிஜன் செறிவு குறைந்தால் மருத்துவமனைக்குச் செல்லுமாறு சுகாதாரத்துறை மக்களை கேட்டுக்கொண்டது.

மருத்துவ ஆலோசனையின்றி ஆண்டி பயாடிக் (அ) இருமல் சிரப்களை எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும் அவசர காலங்களில் மாநில ஹெல்ப்லைன் 14416-ஐ மக்கள் பயன்படுத்தி அழைக்கலாம் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Chella

Next Post

பிரபல நடிகர் விஜய் சேதுபதி குடும்பத்தில் இருந்து திரைக்கு வரும் புதிய நபர்…..! யார் தெரியுமா…..?

Wed Apr 19 , 2023
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் தமிழ் திரையுலகில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது ஆகவே இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் அனைவரும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். அதோடு தற்சமயம் ஜவான், மேரி கிறிஸ்மஸ், பிசாசு 2 என […]

You May Like