2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 2017 இல், டெல்லியில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம், 2ஜி ஊழல் தொடர்பான சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகம் (ED) வழக்குகளில் இருந்து ஆ.ராசா, எம்.பி கனிமொழி மற்றும் மற்ற 17 பேரை விடுவித்தது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், வினோத் கோயங்கா, ஆசிப் பல்வா, திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி, பி. அமிர்தம், கலைஞர் டிவி இயக்குநர் சரத்குமார் உள்ளிட்ட 17 பேரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.
மார்ச் 19, 2018 அன்று, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை உயர் நீதிமன்றத்தை அணுகியது. ஒரு நாள் கழித்து, சிபிஐயும் உயர் நீதிமன்றத்தில் விடுதலையை எதிர்த்து தனது மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.
இந்த நிலையில் 2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2ஜி வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு ஏற்கப்பட்டுள்ளது. சிபிஐ-யின் மேல்முறையீட்டை விசாரணைக்கு ஏற்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் ஆ.ராசா மற்றும் திமுக எம்பி கனிமொழி இருவரையும் சிபிஐ எந்த நேரத்திலும் விசாரணை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.