fbpx

கிறிஸ்தவ நலவாரிய உறுப்பினர்களுக்கு விபத்து நிவாரணம்…! விண்ணப்பம் வரவேற்பு…!

நாமக்கல் மாவட்டத்தில் கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் அலுவலர் சாரா உறுப்பினர் நியமனத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்டு நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நலவாரியத்தின் மூலம் நலவாரிய உறுப்பினர்களுக்கு விபத்து நிவாரணம், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேற்படி நலவாரியத்தில், அலுவலர் சாரா உறுப்பினர்களை நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர், கிறித்துவ மதத்தைச் சேர்ந்த, சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் மற்றும் சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை உடையவர்களாக இருத்தல் வேண்டும்.

எனவே, விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விபரக் குறிப்புகளுடன் (பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி,வயது, முகவரி கிறித்துவர் என்பதற்கான சான்று, தற்போதைய முகவரி, ஆதார்எண், கல்வித்தகுதி, தொழில், குடும்ப உறுப்பினர் விவரம், தொலைப்பேசி எண், ஆற்றிய சேவை) (Bio Data) அடங்கிய விவரங்களுடன் மூன்று பிரதிகளில் விண்ணப்பித்தல் வேண்டும். தகுதியான விண்ணப்பங்கள் அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்பப்படும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுக வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

ஒரே மாதிரி சிக்கன் செய்ய போரடிக்குதா.! இந்த ஈஸியான ஜப்பான் சிக்கன் செய்து பாருங்க.!?

Sun Jan 21 , 2024
நவீன காலகட்டத்தில் சைவ உணவுகளை விட அசைவ உணவு பிரியர்கள் பெருகிக்கொண்டே வருகின்றனர். தற்போது வாரத்திற்கு இரண்டு முறையாவது வீட்டில் அசைவ உணவை சமைத்து வருகிறோம். அவ்வாறு சமைக்கும் போது விதவிதமான சுவையில் சாப்பிட வேண்டும் என்று பலரும் விரும்புவோம். குறிப்பாக வீட்டில் சிக்கன் சமைக்கும் போது எப்போதும் ஒரே மாதிரி இல்லாமல்  கொஞ்சம் வித்தியாசமான சுவையில் ஜப்பான் சிக்கன் செய்து பாருங்க? தேவையான பொருட்கள்எலும்பு நீக்கிய சிக்கன் – […]

You May Like