ஹிமாச்சலபிரதேசத்தில் கனமழையால் வீடு இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி 4 சிறுமிகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஹிமாச்சல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இந்நிலையில் சர்மாவூர் என்ற மாவட்டத்தில் கிஜிவாடி கிராமத்தில் வீடு ஒன்று இடிந்தது. இதில் மம்தா(27), மற்றும் அவரது மகள்கள் அராங் (2), அமீஷா (6) இஷிதா(8) மற்றும் அண்ணன் மகள் அகான்ஷிகா (7).. ஆகியோர் இடிபாடுகளில் சிக்கினர்.

தகவல் அறிந்துவந்த தீயணைப்பு அதிகாரிகள் மீட்கும் பணியில் ஈடுபடடனர். இதனிடையே மம்தா மற்றும் அவரது கணவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும்போது 4 பேரையும் உடல்களாக மீட்டது அப்பகுதிமக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இன்னும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெய்ராம் தாகூர் உறுதி அளித்துள்ளார். இதே போல குல்லு என்ற இடத்தில் பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்த விபத்தில் 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதில் 3 பேர் ஐ.ஐ.டி. மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

5 பேர் சம்பவ இடத்திலும் 2 பேர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.