பொதுவாக பெண்களையும், அவர்களின் மனதையும் புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. குறிப்பாக அவர்களின் குணாதிசயங்களை புரிந்து கொள்வது என்பது அன்று முதல் இன்று வரை பல ஆண்களுக்கும் புரியாத புதிராகவே இருந்து வருகின்றது. இயற்கையாகவே பெண்களிடம் பாசம், அன்பு போன்ற குணங்கள் அதிகமாக காணப்பட்டு வந்தாலும் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் இருந்து வருகின்றன. இதை சாணக்கியர் தனது சாணக்கிய நீதி புத்தகத்தில் குறிப்பிட்ட குணாதிசயங்கள் கொண்ட பெண்களிடம் ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதைக் குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
- ஒரு பெண் தான் நினைத்த காரியத்தை சாதிப்பதற்காக எந்தவித எல்லைகளுக்கும் செல்ல தயங்காமல் இருந்தால் அப்பெண் தவறான குணம் உடையவராகவே சாணக்கிய நீதிபடி கருத்தப்பட்டு வருகிறார்.
- தான் நினைத்த செயல்களை செய்வதற்காக மற்றவர்களை ஏமாற்றுவது அல்லது மற்றவரை கட்டுப்படுத்தி அந்த காரியத்தை செய்ய வைப்பது இது போன்ற செயல்களை செய்யும் பெண்களையும் தவறான பெண்ணாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
- திருமணத்திற்கு பின்பு திருமணஉறவில் நம்பிக்கை இல்லாத செயல்களை செய்வது, திருமண உறவில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது போன்ற குணங்களையுடைய பெண்கள்,
- கிசுகிசு வதந்தி மற்றும் நம்பிக்கை துரோகம் செய்யும் பெண்கள் தவறான குணம் உடையவர்களாக கருதப்படுகின்றனர்.
- படித்தவர்கள் மற்றும் பெரியவர்களை அவமரியாதை செய்வது,
- நேர்மையான குணங்கள் இல்லாமல் இருப்பது, எந்த பொருளிலும் அதிகமாக பேராசை கொள்வது போன்ற குணமுடையவர்களை சாணக்கிய நீதிபடி மோசமான குணமடைய பெண்களாக கருதப்பட்டு வருகிறது. எனவே இத்தகைய பெண்களிடம் ஆண்கள் ஜாக்கிரதையாக இருந்து வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.ஆண்களே.