fbpx

வேலை இல்லாத இளைஞர்களே கவனம்… இன்று காலை 10 மணி முதல் முகாம்…! அரிய வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க…!

தர்மபுரி மாவட்டத்தில் இன்று வேலை வாய்ப்பு முகாம் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்

தனியார்‌ துறை நிறுவனங்களும்‌ – தனியார்‌ துறையில்‌ பணிபுரிய விருப்பம்‌உள்ள மனுதாரர்களும்‌ கலந்துக்கொள்ளும்‌ “தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌” ஒவ்வொரு மாதத்தின்‌ இரண்டாம்‌ மற்றும்‌ நான்காம்‌வெள்ளிக்கிழமைகளில்‌ நடைபெறுகிறது . எனவே, தனியார்‌ துறை நிறுவனங்கள்‌தங்களுக்குத்‌ தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்‌. இது ஒரு இலவசப்பணியே ஆகும்‌. இதன்‌ மூலம்‌ தனியார்‌ துறையில்‌ வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.அரசுத்‌ துறைகளில்‌ அவர்களது பதிவு மூப்பின்படி நேர்முகத்‌ தேர்வு அனுப்பப்படும்‌.

எனவே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில்‌ பதிவு செய்துள்ள நபர்கள்‌ தனியார்‌ துறையில்‌ வேலைக்கு சென்றால்‌ அவர்களது பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இம்முகாமில்‌ பல்வேறு தனியார்‌ நிறுவனங்கள்‌ கலந்து கொண்டு விற்பனையாளர்‌, மார்க்கெடிங்‌ எக்ஸ்க்யூட்டிவ்‌, சூப்பர்வைசர்‌, மேலாளர்‌,கம்ப்யூட்டர்‌ ஆப்பரேட்டர்‌, தட்டச்சர்‌, அக்கவுண்டன்ட்‌, கேசியர்‌, மெக்கானிக்‌,போன்ற பணிகளுக்கு தேர்வு செய்ய உள்ளனர்‌. டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும்‌ பள்ளிப்படிப்பு முடித்த ஆண்‌, பெண்‌, மூன்றாம்‌ பாலினத்தவர்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ உட்பட அனைத்துவித கல்வித்தகுதிக்கும்‌ ஆட்கள்‌ தேவை என தனியார்த்‌ துறை நிறுவனங்கள்‌ தெரிவித்துள்ளன.

ஆகவே, மேற்படி பணிகளுக்கு தகுதியும்‌, விருப்பம்‌ உள்ள நபர்கள்‌ அனைவரும்‌ இன்று காலை 10.00 மணிக்குதருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்‌ நெறிவழிகாட்டும்‌ மையத்தில்‌நடைபெறவுள்ள தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாமில்‌ கலந்துக்கொண்டு பயன்பெறலாம்‌. இது தவிர இதர கல்வித்தகுதிகள்‌ உடையோரும்‌ தகுந்த பணியிடங்களுக்கு பரிசிலீக்கப்படுவர்‌ என மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மேலும் 4% உயர்த்தி அறிவிப்பு...? உண்மை செய்தி என்ன...? முழு விவரம் இதோ...

Fri Aug 26 , 2022
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப்பில் செதி ஒன்று பரவி வருகிறது. இந்த செய்தி போலியானது என்றும், அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அகவிலைப்படி 01.07.2022 முதல் அமலுக்கு வரும் என்று போலி செய்தி ஒன்று பரவி வந்தது. மத்திய அரசு இது போன்ற எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை, ”என்று போலிச் செய்திகளை கண்டறியும் பத்திரிகை […]
அரசு ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்..!! தீபாவளி போனஸ் அறிவிப்பு..!! எவ்வளவு தெரியுமா..?

You May Like