fbpx

இந்த 10 மாவட்டத்தில் உள்ள மக்கள் எச்சரிக்கையா இருங்க… கொட்டி தீர்க்க போகும் கனமழை…!

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக; இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 5-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை : இலட்சத்தீவு பகுதி, கர்நாடகா – கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read: சூப்பர் ஜாக்பாட்: தமிழகத்தில் உள்ள கூட்டுறவு பணியாளர்களுக்கு 23% ஊதிய உயர்வு…! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

Vignesh

Next Post

முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர் சேர்கை...! ஜூலை 27-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம்...! முழு விவரம் உள்ள...

Sat Jul 2 , 2022
இளமறிவியல் பாடப்பிரிவுகளில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் ஜூலை 27-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 -23-ம் கல்வியாண்டில் இளமறிவியல் பாடப்பிரிவுகளில் விண்ணப்பிப்பதற்கான இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஜூலை 27-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 18 உறுப்பு கல்லூரிகளில் 2,148 இடங்களும், 28 இணைப்பு கல்லூரிகளில் 2337 இடங்களும் உள்ளன. 12 இளமறிவியல் […]

You May Like