fbpx

Rain Alert…! தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் ; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். 30-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு அதிகபட்சமாக 65 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

English Summary

According to the Meteorological Department, there is a chance of rain in Tamil Nadu for the next 6 days.

Vignesh

Next Post

ஒலிம்பிக் பதக்கத்தின் பின்புறம் எந்த கடவுளின் படம் உள்ளது?. சிறப்புகள் என்ன?

Mon Jul 29 , 2024
The image of which god is on the back of the Olympic medal? What are the specialties?

You May Like