fbpx

வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…! இந்த 11 மாவட்டத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை…!

தமிழகத்தில் வரும் 12-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், நாளை பெரும்பாலான இடங்களிலும், 9 முதல் 12-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும்.

அதேபோல, 9, 10-ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்கள், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடதமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் 7, 8-ம் தேதிகளில் மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

English Summary

According to the Meteorological Department, there is a chance of rain in Tamil Nadu till the 12th.

Vignesh

Next Post

ஒரே நிமிடத்தில் வேண்டிய வரம் தரும் நிமிஷாம்பாள் கோவில்.. சென்னையில் எங்க இருக்கு?

Thu Nov 7 , 2024
Sri Nimishambal Temple, which gives blessings in minutes.. Is there such a temple in Chennai?

You May Like