பொங்கல் திருநாளைச் சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழக்கம். அதே போல தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இது குறித்து பரிசீலனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 98.3 % பேர் பயோமெட்ரிக் முறையில் பொருட்களை வாங்கி வருகிறார்கள். ஒரு சில மாவட்டங்களில் சோதனை முறையில் கருவிழி ஸ்கேனர் மூலம் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விரைவில், தமிழகம் முழுவதும் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. கைரேகை பதிவு மூலம் பலருக்கு ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதில் சிக்கல் உள்ள நிலையில் கருவிழி ஸ்கேன் மூலம் பொருட்கள் வாங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்ய உள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள பயோமெட்ரிக் முறையால் ரேஷன் கடை ஊழியர்களும் பொதுமக்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். பலருக்கு கைரேகை பதிவாகாத காரணத்தினால் பொருட்களை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக கருவிழி ஸ்கேன் மூலம் பொருட்கள் வாங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்ய உள்ளது.